காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் 27வது நூலான முக்காழி நாவல் வெளியீட்டு வைபவம் - Sri Lanka Muslim

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் 27வது நூலான முக்காழி நாவல் வெளியீட்டு வைபவம்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

வைத்தியா் காப்பியக்கோ ,ஜின்னாஹ் ஷரிபுத்தீனின்27வது நூலான முக்காழி   எனும் நாவல்  வெளியீட்டு வைபவம் கொழும்பு தமிழ் சங்கத்தில் வைத்தியா் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சா் பீ.பீ. தேவராஜ் கலந்து கொண்டாா். இந் நிகழ்வில் 27 நுால்களை  உலகிலேயே அதிக காப்பியங்களை எழுதிய காப்பியப்புலவன்.

கின்னஸ் புத்தகத்தில் சாதனைகள் பதியவேண்டும் எனக் கூறி மேடையில் திடிரென தோன்றிய அமைச்சா் மனோ கனேஸன் அவா்கள்  வைத்தியா் ஜின்னாஹ்வைக் பொன்னாடை  போற்றி மாலையிட்டு கௌரவித்தனா்.   .

தமிழ்ச்சங்கத்தின் தலைவா் சட்டத்தரணி.ராஜகுலேந்திரன், உடுவை தில்லை நடராஜா திக்குவலைக் கமால்  .நாவலாசிரியா் மு .சிவலிங்கம், ஊடகவியலாளா் ஏ அஷ்ஹா்   ஹம்லா ஸமா ஸமத்,  உரைகளும் ்இடம்பெற்றன.   ஹிந்து கிரிஸ்த்துவ  மதப் பெரியாா்களின் வாழ்த்துக்களும் இடம் .

ஓய்வுபெற்ற அதிபா் காலம் சென்ற அபுசாலி அவா்களின் ஞாபகாா்த்தமாகவும் கவிஞா் டாக்டா் தாசீம் அஹமத் அவா்களுக்கு சமா்ப்பணமாக இந் நாவல் வெளியீடப்பட்டது. இதுவரை 11 காப்பியங்களும்  2 நாவல்களும் 15க்கும் மேற்பட்ட கவிதை நுால்களையும் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புத்தீன் வெளியீட்டுள்ளாா்.

இவரது நுால்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழ் பேசும் சமுகத்தில்  சிறந்தொரு இலக்கியவாதியாக திகழ்வதையும் இவ் விழாவுக்கு வருகை தந்த தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் கல்வியலாளா்கள் ஊடகவியலாளா்கள் அனைவரும் சான்று பகின்றனா்.

568 561 553 552

Web Design by Srilanka Muslims Web Team