முன்னாள் அமைச்சர் " ஏ . ஆர் . மன்சூர் - வாழ்வும் பணிகளும"நூல் வெளியிட்டு விழா - Sri Lanka Muslim

முன்னாள் அமைச்சர் ” ஏ . ஆர் . மன்சூர் – வாழ்வும் பணிகளும”நூல் வெளியிட்டு விழா

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எம்.என்.எம்.அப்ராஸ்)


ஏ . ஆர் . மன்சூர் பவுண்டேசன் ஏற்பாட்டில்
முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பற்றி கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துள்ளா எழுதிய ” ஏ . ஆர் . மன்சூர் – வாழ்வும் பணிகளும”நூல் வெளியிட்டு விழா

மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பாரியார்
ஹாஜியானி ஸொஹறா மன்சூர் முன்னிலையில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வர் ரஹ்மத் மன்சூரின் தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை(12) ‘பிற்பகல் 3 .30 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் நூல் வெளியிட்டு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சியின்
தேசிய தலைவரும் , நகர திட்டமிடல் , தேசிய நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்
சட்ட முதுமானி ரஊப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் பேராதனைப் பல்கலைக் கழகத்தின்
மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எம் . ஏ . நுஃமான் அவர்கள் நூல் ஆய்வுரையை வழங்கவுள்ளார். அத்துடன்தென்கிழக்குப் பல்கலைக் கழகதின் தமிழ் மொழித்துறைத் தலைவர் , பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வினால் நூல் பற்றிய அறிமுகவுரையும் ,நூலாசிரியர் ஏ . எம் . பறக்கத்துள்ளாஹ் அவர்களினால் ஏற்புரையை நிகழ்த்தப்படவுள்ளது

நூல் வெளியிட்டின் நன்றியுரையை டாக்டர் எஸ் . நளீம்டின் அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team