கினியம இக்ராம் தாஹாவின் ''உரிமைக் குரல்'' சிறுகதை நூல் வெளியீட்டு விழா - Sri Lanka Muslim

கினியம இக்ராம் தாஹாவின் ”உரிமைக் குரல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ரிம்ஸா முஹம்மத்


கினியம இக்ராம் தாஹா எழுதிய ‘உரிமைக் குரல்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2019 ஜனவரி; 18 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 4.00 மணிக்கு குளி/ இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்; நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, கானெம் கினியம குளோபல் சொசைடியின் உப தலைவர் எம்.எஸ்.எம். றிமாஸ் முன்னிலையில் குளி/ இஹல கினியம முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.டி.எம். ஹாசிம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எம்.ஏ.ஜீ. அஷ்ரப் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் விசேட அதிதிகளாக மொழிபெயர்ப்பாளர் ஹேமசந்திர பத்திரன, சட்டத்தரணி ஏ.டப்ளியூ. சாதிக்குல் அமீன், பிங்கிரிய பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச். இஸ்மத் ஹஸன் (நளீமி) அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் சிறப்பதிதிகளாக ஆசிரியர் எம்.ஜே.எம். நமீஸ், ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம்.எம். நியாஸ், மௌலவி எம்.ஐ. சித்தீக், ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எல்.எம். சுலைமான், ஓய்வு பெற்ற அதிபர் மஜ்மிலா இன்சார், ஓய்வு பெற்ற ஆசரியர் ஏ.எச்.எம். இல்யாஸ், ஓய்வு பெற்ற தமிழ் மொழி ஆசரியர் எம்.ஐ. மஹ்பூபா, ஓய்வு பெற்ற அதிபர் எம்.எச்.எம். சத்தார், ஓய்வு பெற்ற ஆசரியரும் எழுத்தாளருமான பஸீலா அமீர், எழுத்தாளர் ரினோஸா முக்தார் ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.

சர்வதேசப் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். நஸீர் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார். அதேபோல நூலின் விசேட பிரதிகளை சமூக சேவையாளர் தேசபந்து அல்ஹாஜ். எப். அலாவுதீன் மற்றும் ஷாபிர் மன்சூர் பவுண்டேசன் பணிப்பாளர் தேசபந்து எம்.எம்.எம். ஷாபிர் ஆகியோர் விசேட பிரதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

எம்.எம். முஹம்மது முப்தி என்ற மாணவனின்; கிராஅத்துடன் ஆரம்பிக்கவிருக்கும் இந்நிகழ்வில்; வரவேற்புரையை அதிபர் எம்.ரி.எம். தஹ்லான் நிகழ்த்த, வாழ்த்துரைகளை விடிவெள்ளி பத்திரிகை பிரதம ஆசிரியர் ஜனாப். எம்.பி.எம். பைறூஸ், மேல் மாகாணம் ஒய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் ஜனாப். ஐ.எல்.எம். இன்சார், மேசி கல்வி வளாக அதிபர் அல்ஹாஜ். ஏ.எச். சமீம், தர்கா நகர் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் யாழ். ஜுமானா ஜுனைட் ஆகியோர் நிகழ்த்தவுள்ளார்கள்.

பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் பன்னூலாசிரியருமான ரிம்ஸா முஹம்மத்; அவர்கள் நயவுரையை நிகழ்த்த, குளியாப்பிட்டிய கல்வி வலயத்தின் தமிழ் மொழிப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஜீ. அஷ்ரப் அவர்கள் கருத்துரையை நிகழ்த்துவார்கள். சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி கவி நயத்தை நிகழ்த்துவார். இறுதியாக ஏற்புரை மற்றும் நன்றியுரையை நூலாசிரியர் இக்ராம் தாஹா அவர்கள் நிகழ்த்துவார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை ஐ.எல்.எம். இக்பால் ஆசிரியர் தொகுத்து வழங்கவுள்ளார் இந்நிகழ்வுகளை கானெம் கினியம குளோபல் சொசைடி நிறுவனத் தலைவர் மௌலவி எஸ்.எச்.எம். றியாஸ்தீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்நிகழ்வில் கலை இலக்கியவாதிகள், கல்விமான்கள், சமூக சேவையாளர்கள் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Ikram Thaha Photo Final Urimaik Kural Front Cover

Web Design by Srilanka Muslims Web Team