வாசித்து முடித்த இன்னுமொரு நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு - Sri Lanka Muslim

வாசித்து முடித்த இன்னுமொரு நூல் பற்றிய அறிமுகக் குறிப்பு –

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Shakeeb Khalid


“சிறைப்பட்ட நிலமும் ஊனமுற்ற தேசமும் ” என்ற தலைப்பிலான மொழிபெயர்ப்பு கவிதைகளின் தொகுப்பொன்றை நளீமியா கலாபீட பட்டதாரிகளான முஹம்மத் இம்தியாசும் பைசல் பரீதும் இணைந்து மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள் . அரபு மொழிக்கவிதைகள் முழுவதுமாக நேரடியாக அரபு மொழியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் பெற்றிருப்பது இதன் முதல் தனிச்சிறப்பு ..

கவிஞர் மேமன் கவி வழங்கியிருக்கும் ஆழமானதொரு முன்னுரையில் காத்தான்குடி பெளஸ் எஸ் எச் ஆதம்பாவா போன்றோரும் நேரடி மொழிபெயர்ப்பில் கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .

இரண்டு எழுத்தாளர்கள் இரண்டு பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டிருக்கும் இக்கவிதை நூலில் ஏற்கனவே தமிழுலகில் அறியப்பட்ட மஹ்மூத் தர்வீஷ் , நாசிக் மலாய்கா போன்றோர் உள்ளடங்களாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன .

” ஒடுக்கப்பட்ட வாழ்வியல் உரிமைகளைப் பேசும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் ” என்ற அட்டைப்படக் குறிப்புடன் வந்திருக்கும் இக்கவிதை நூல் தமிழின் பரந்த இலக்கிய உலகுக்கு சென்றடைந்து இவ்விளம் படைப்பாளிகள் பரவலாக கவனம் பெறவும் வேண்டும் .

இது அறிமுகக் குறிப்பு என்றாலும் இரு எழுத்தாளர்கள் இரு பதிப்பகங்கள் இணைந்தும் எண்ணிறைந்த எழுத்துப் பிழைகளுடன் வந்திருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும் ..

பெரும் பதிப்பகங்களுக்கும் பெரும்அடையாளம் கொண்டவர்களுக்கும் பின்னால் மாத்திரம் போகிறவர்களை இவர்களையும் கண்டு ஊக்கப்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறேன் ..

Web Design by Srilanka Muslims Web Team