தலைவன் - கவிதை - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வை எல் எஸ் ஹமீட்
25/01/2019


நிலவு சுடுகிறது;
என்றேன்.
குளிர மட்டும் தெரிந்த நிலவு
எப்படி சுடும்; என்றான்.

சேவல் முட்டையிட்டது;
என்றேன்.
கற்பனைக்கும் ஓர் எல்லை
இருக்கிறது; என்றான்.

இரவில் சூரியன் உதித்தது;
என்றேன் .
அது பகல், இன்னும்
விழிக்கவில்லையா? என்றான்.

நெருப்பு குளிர்கிறது;
என்றேன்.
நெருப்புக்கும் குளிருக்கும்
என்ன சம்பந்தம்; என்றான்.

மலடி குழந்தை பெற்றாள்;
என்றேன்.
உலக அதிசயம்
என்றான்.

உன் தலைவன் உன் உரிமை
பெற்றுத்தருவான்; என்றேன்.
நீ மேலே சொன்ன அனைத்தையும்
நம்புகிறேன்; என்றான்.

Web Design by Srilanka Muslims Web Team