ஏறி நின்று பார்த்த போது - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ஏழு பேரும் சேர்ந்து
ஏறி நின்று பார்த்த போது
தெளிவாகத் தெரிந்தது
திரு நாட்டின் அவலங்கள்

இந்தத் தேசத்தில்
‘ஞானத்’திற்கு உள்ள மதிப்பு
விஞ்ஞானத்திற்கு இல்லை என்று
விளங்கிக் கொண்டார்கள்

ஆமர் வீதியில்
அப்பாவுடன் சேர்த்து
அவரின் கொள்கைகளும்
அன்றே சிதைந்து விட்டன என்ற
அதிர்ச்சிச் செய்தி
அப்பட்டமாய் தெரிந்தது.

மீடியாக்களுக்கு பசி வந்தால்
மிருகத்திலும் கேவலமாய்
மிலேட்சத்தனம் புரியுமென
மிகத் தெளிவாய் தெரிந்தது

ஈ மொய்த்தாலும்
ஸ்ட்ரைக் பண்ணும் மாணவர்கள்
இனம் என்று வந்தால்
எதுவும் செய்யார் என்று
இலேசாகப் புரிந்தது
ஏறிய மாணவர்க்கு

செய்த தவறை
சீவி அம்பாக்கி
எய்து காயப்படுத்தி
கைது செய்ய வைத்து
இன்பம் காண்பவர்களும்
இங்கு உள்ளார்கள் என்பது
இளைஞர்களுக்குப் புரிந்தது.

தவறுகள்தான்
பாடம் தருகின்றன
இந்தத் தவறு
படமே தந்தது
எத்தனை நடிப்புக்கள்
இயக்கங்கள்
பக்க வாத்தியங்கள்
பயங்கர வில்லன்கள்

அவர்கள் ஏறினார்கள்
சிலர்கள் இறங்கினார்கள்
மக்களின் மனங்களில் இருந்து….!

Web Design by Srilanka Muslims Web Team