உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நோவா விளையாட்டுக் கழகம் சம்பியன் » Sri Lanka Muslim

உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நோவா விளையாட்டுக் கழகம் சம்பியன்

IMG-20190201-WA0026

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எம்.ஏ.முகமட் )


டிஸ்கோ விளையாட்டு கழகத்தின் 37வது வருட பூர்த்தியை முன்னிட்டு கிண்ணியா பிரதேச கழகங்களுக்கிடையிலான உதைந்தாட்டப் இறுதிப் போட்டி எழிலரங்கு மைதானத்தில் அண்மையில் நடை பெற்றது.

முகம்மதியா மற்றும் நோவா விளையாட்டு கழகங்கள் இவ் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தன.2-0 கோல் கணக்கில் முகம்மதியா விளையாட்டுக் கழத்தை தோல்வியுறச் செய்து நோவா விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.

அணிக்கு 7 பேர் கொண்ட இப் போட்டியில் 56 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

இந் நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.பாயிஸ் பிரதம அதிதியாகவும் ,கிண்ணியா நகர சபை றகுமானியா நகர் வட்டார உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சபியுள்ளா,அல் புர்க்கான் வித்தியாலய அதிபர் ஏ.எஸ்.எம்.ஹைதர் ஸலாம்,அல் அக்ஸா கல்லூரி உடற் கல்வி ஆசிரியர் நபீல்,டிஸ்கோ விளையாட்டுக் கழத்தின் முன்னாள் தலைவர் சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

வெற்றி பெற்ற நோவா கழகத்திற்கு முதலாம் பரிசாக 37 ஆயிரம் ரூபாயும், வெற்றி கேடயமும்,இரண்டாம் பரிசாக முகம்மதியா கழகத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் வெற்றி கேடயமும் அதிதிகளால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Web Design by The Design Lanka