கவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா - Sri Lanka Muslim

கவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ம் திகதிஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் சபாஜெயராசா தலைமையில நடைபெற உள்ளது.

பேராசிரியர் எஸ். தில்லைநாதன் பிரதம அதிதியாகவும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் சிறப்பதிதியாகவும் கலந்து கொள்கின்றனர்.

வரவேற்புரையை கலையழகி வரதராணி நிகழ்த்துவார் தொடக்கவுரையை காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் நிகழ்த்த முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்வார்.

நூல் நயவுரையை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா வழங்குவார்.கொழும்பு பல்கலை கழகத்தால் அண்மையில் கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்ற ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி யூ.எல்.ஏ.மஜீத் இந்நிகழ்வில் கௌரவம் பெற உள்ளார்.

கௌரவிப்பு உரையை சட்டத்தரணி மர்சூம் மௌலானா வழங்குவார். சித்திலெப்பை ஆய்வு பேரவையினர் ஏற்பாட்டில் நீதிபதி யூ.எல்.ஏ.மஜீதுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்படும். வாழ்த்துரைகளும் இடம் பெறும்.

ஊடக அதிதிகள் கலந்து சிறப்பிக்கவிருக்கும் இந் நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் சிறப்புப்பிரதிகளை பெற்றுக் கொள்வர். சிரேஷ்ட வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் நாகபூஷணி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கப்படுகின்றனர்.

dr Page000111

Web Design by Srilanka Muslims Web Team