டொக்டர் தாஸீம் எழுதிய ”கவிதைச் சிறகு” நுால் வெளியீட்டு வைபவம்

0 0
Read Time:2 Minute, 10 Second

வைத்தியரும், கவிஞருமான தாசீம் அகமதுவின் ”கவிதைச் சிறகு” நுால் வெளியீட்டு வைபவம் நேற்று(17) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் புலவா்மணி ஆ.மு. சரிபுத்தீன் மற்றும் கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோா்களது அரங்கில் பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின்போது நுாலின் முதற் பிரதியை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியா் எஸ்.தில்லைநாதனிடமிருந்து புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை சம்பந்தமாக கலாநிதி பட்டம் பெற்ற ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும், வக்பு நீதிச் சபையின் தலைவருமான கலாநிதி யு.எல்.ஏ மஜிதை கௌரவிப்பு நிகழ்வில் அறிஞா் சித்திலெப்பை ஆய்வு மற்றத்தின் தலைவா் சட்டத்தரணி மர்சூம் மொளலானா, காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன், தினகரன் ஆலோசகா் எம்.ஏ.எம் நிலாம், பொறியியலாளா் நியாஸ் ஏ சமத் ,வைத்தியா் தாசீம் அகமத் ஆகியோா் இனைந்து பொன்னாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி வைப்பதனையும் படத்தில் காணலாம்.

இந் நிகழ்வி பேராசிரியா் சபா ஜெயராசா தலைமையுரையும், , பேராசிரியா் சோ.சந்திரசேகரம், சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோா் சான்றோா் பெரும் மஜித் பற்றிய கௌரவிப்பு உரையும், பேராசிரியா் ரமீஸ் அப்துல்லா  ’நுால் நயவுரையும் கலையழகி வரதராணி வரவேற்புரை, காப்பியக்கோ ஜன்னாஹ் சரிபுத்தீன் தொடக்கவுரையும், கே. நாகபூசனி நிகழ்ச்சித் தொகுப்பினையும் ஆற்றினாா்கள்.

7778

7y 88 iu55

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %