விபத்தில் ஒருவர் வபாத்: சிறுவன் படுகாயம்

0 0
Read Time:1 Minute, 24 Second

கிண்ணியா – சூரங்கல், கற்குழி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதியதில் அப்பப்பா உயிரிழந்துள்ளதுடன், பேரன் படுகாயமடைந்த நிலையில் நேற்று மாலை (22) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா – முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த எம். எஸ். எம். இத்ரீஸ் (63 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அவருடன் பயணித்த மகனின் மகன் எச். முகம்மட் இப்திகார் (10 வயது) படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %