கொழும்பு-12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரி: வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - Sri Lanka Muslim

கொழும்பு-12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரி: வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

Contributors
author image

A.S.M. Javid

கொழும்பு-12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் சிறுவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம்.மஹ்ஹூர் தலைமையில் நேற்று முன்தினம் (26) சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுநர் அசாத் ஷாலியும், கௌரவ அதிதிகளாக கொழும்பு வலய கல்வித் திணைக்களத்தின் திட்டப் பணிப்பாளர் மும்தாஸ் பேகமும், கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் அல்-ஹாஜ் இப்ராஹிம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் முதல் இடத்தை மினா இல்லமும், இரண்டாவது இடத்தை ஹிரா இல்லமும், மூன்றாம் இடத்தை ஸபா இல்லமும் பெற்றுக் கொண்டது. இவர்களுக்கான கேடயங்களை பிரதம அதிதி வழங்கி வைத்தார்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

01 1st Place 02, 2nd place 03. 3rd place

Web Design by Srilanka Muslims Web Team