ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் மலர் வெளியீடும் - Sri Lanka Muslim

ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் மலர் வெளியீடும்

Contributors
author image

P.M.M.A.காதர்

மூத்த கவிஞர் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீனுக்கான இலக்கியப் பொன் விழாவும் ,சிற்பம் செதுக்கிய சிற்பி மலர் வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10-03-2019)அட்டாளைச்சேனை,மீனோடைக் கட்டுஅல்-ஷக்கீ மண்டபத்தில் முன்னாள் வெளிநாட்டு தூதரக அதிகாரி எம்.ஸிராஜ் அஹமத் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்ருமான கவிஞர் றஊப் கலந்து கொள்ளவுள்ளார்.கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,விஷேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,தென்கிழக்குப் பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம்,வவுணியா மாவட்ட செயலாளர் ஐ.எம்.ஹனிபா,முன்னாள் சுங்கப் பணிப்பாளர் யூ.கே.எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

முன்னிலை அதிதிகளாக முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி,கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை,சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோருடன் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா அகியொரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலக்கிய அதிதிகளாக எழுத்தாளர் உமா வரதராஜன்,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,வாழ்நாள் சாதனையாளர் தமிழ் மாமணி மானா மக்கீன் ஆகியோருடன் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,கல்விமான்கள், அதிகாரிகள், கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team