கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு - Sri Lanka Muslim

கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கட்டார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு மற்றும் விசேட இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – 2019

தகவல்: அபு உமைர் ஆல் சூரி


உலகத்தின் அலங்காரத்திற்குள் அமிழ்ந்து அற நெறிக்கப்பால் அள்ளுண்டு போகும் நமது இதயங்களை இஸ்லாமிய உணர்வுக்குள் நுளைத்து அல் குர்ஆனின் ஒளியில் நமக்கான தெளிவான பாதையை அமைத்துக்கொள்ள SLDC எஸ்.எல்.டி.சி. கட்டார் அமைப்பினால் இந் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது.

‘அல் குர்ஆன் எம்மோடு பேசுகிறது’ எனும் கருப்பொருளில் கருக்கட்டவிருக்கும் இந்நிகழ்ச்சிகளை தவறவிடவேண்டாம் உறவுகளே!

 (எஸ்.எல்.டி.சி) கட்டார் அமைப்பின் கௌரவ தலைவர் அஷ்ஷய்க் ULM அஸ்லம் ஸஹ்வி தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில், உங்கள் உள்ளங்களை ஊடறுத்து உண்மைகளை தெளியவைக்க மாருதமாய் வரும் உரைகளின் தலைப்புக்கள் இதோ!

01. நபியும் அல் குர்ஆனும்;
02. அல் குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்
03. உறுதியான பாதைக்கு வழிகாட்டும் அல் குர்ஆன்
இத்தலைப்புகளில் உரையாற்றும் பிரபல உலமாக்கள்:
 அஷ்ஷய்க் டாக்டர் ரஈஸூத்தீன் (ஸரஈ),
பணிப்பாளர் – இலங்கை றாபிதத்து அஹ்லிஸ்ஸூன்னாஹ், சிரேஸ்ட விரிவுரையாளர் – கொழும்பு பல்கலைக்கழகம்.

 அஷ்ஷய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி)
சிரேஸ்ட விரிவுரையாளர் – தாருல் ஹூதா பெண்கள் அரபுக் கலாசாலை

 அஷ்ஷய்க் ACK. . முஹம்மத் ரஹ்மானி
தஃவா குழு உப தலைவர் – SLDC (எஸ்.எல்.டி.சி) கட்டார்

 இம்மாதம் 15ம் திகதி மார்ச் மாதம் 2019 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 09.30 மணி வரை பின் செயித் பனார் கேட்போர் கூடத்தில் சொற்பொழிவுகளால் உள்ளத்தை நிரப்பலாம்

 அனைத்து மக்களுக்கும் நேர்வழியை காட்டும் பொருட்டு மிக இலகு நடையில் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது.

 அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் (4:82)

 இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம், படிப்பினை பெறுவோர் உண்டா? (54:22)
 அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்கவேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24)

அல்குர்ஆனின் அழைப்புக்களின் வீரியத்தை நெஞ்சுக்குள் புதைத்துக்கொள்ள வாரீர் தோழர்களே!
மேலதிக தகவல்களுக்கு SLDC யின் இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்

www.sldcqatar.org
தொடர்புகளுக்கு அழையுங்கள்: 66802028, 70023451
பெண்களும், சிறுவர்களும் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்நிகழ்;வுகளில் கலந்து பயன்பெறுமாறு  SLDC கட்டார் அமைப்பினர் கட்டார் வாழ் உறவுகளுக்கு வாஞ்சையுடன் அழைப்புவிடுக்கின்றனர்.

image001 News Potos

Web Design by Srilanka Muslims Web Team