"திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்" எனும் நூல் வெளியீடு - Sri Lanka Muslim

“திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்” எனும் நூல் வெளியீடு

Contributors
author image

Hasfar A Haleem

“திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் காணிப் பிரச்சினைகள்” எனும் நூல் வெளியீடு நேற்று (30) கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது.

லரீப் சுலைமான் எழுதிய குறித்த நூல் வெளியீட்டுக்கான தலைமையினை கிண்ணியா சூறா சபையின் தலைவர் ஏ.ஆர்.ஏ.பரீட் அவர்கள் தலைமை தாங்கினார்.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக வாணிப கைத்தொழில், நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல், கூட்டுறவுத் துறை, தொழிற் பயிற்சி திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரகுமான் , கட்சியின் செயலாளர் சுபைர்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

20150319220403_IMG_1453 20150319220521_IMG_1466 20150319221034_IMG_1489 20150319223731_IMG_1491

Web Design by Srilanka Muslims Web Team