மருதமுனை ஹரீஷாவின் 'சொட்டும் மிச்சம் வைக்காமல்' கவிதை நூல் வெளியீட்டு விழா. - Sri Lanka Muslim

மருதமுனை ஹரீஷாவின் ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனை ஹரீஷா எழுதிய ‘சொட்டும் மிச்சம் வைக்காமல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(07-04-2019)பி.ப.3.00 மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக பேராசிரியர்களான செ.யோகராசா,றமீஸ் அப்துல்லா ஆகியோரும்,விஷேட அதிதிகளாக கவிஞர் சோலைக்கிளி,எழுத்தாளர் உமா வரதராஜன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆசிரியரும்,ஊடகவியலாளரும்,விமர்சகருமான ஜெஸ்மி எம்.மூஸா நூல் நயவுரை நிகழ்த்தவுள்ளார்.ந}லின் முதல் பிரதியை சிரேஷ்ட சட்டத்தரணியும்,பதில் நீதிபதியுமான ஏ.எம்.பதுறுதீன் பெறவுள்ளார்.

விஷேட பிரதியை கல்முனை ஏ.எம்.எம்.இன்ஜினியரிங் கன்ஸ்ரக்ஷன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸம்மில்,சிறப்புப் பிரதியை மருதமுனை எவபெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் ஆகியோரும் பெறவுள்ளனர்.

ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் நிகழ்வைத் தொகுத்து வழங்கவுள்ளார். தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் நூலை வெளியீடு செய்;கின்றது.கவிஞர்கள்,எழுத்தாளர் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2-BOOK-04-04-2019 2-BOOK-04-04-20195655

Web Design by Srilanka Muslims Web Team