கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பம் » Sri Lanka Muslim

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பம்

school1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எச்.எம்.எம்.பர்ஸான்


இரண்டாம் தவணைக்காக நாளை (17) புதன்கிழமை ஆரம்பமாகவிருந்த கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு இம்மாதம் 11 ம் திகதி முதலாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டது. அத்தோடு இரண்டாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பம் (17) புதன்கிழமை என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே 17, 18 ம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு அதற்கான பதில் பாடசாலை இம்மாதம் 27 ம் திகதி சனிக்கிழமையும் மேமாதம் 4 ம் திகதி சனிக்கிழமையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிழக்கிலுள்ள தேசிய பாடசாலைகள் நாளை (17) ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka