இலங்கை ஊடகவியலாளர்களுக்கு துருக்கியில் பயிற்சி » Sri Lanka Muslim

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு துருக்கியில் பயிற்சி

7787

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

துருக்கி நாடு இலங்கையின் பொருளாதார மற்றும் மனிதபிமானம், சுற்றுலா, ஊடகம் போன்ற துறைகளுக்கு அண்மைக்காலமாக உதவி வருகின்றது.

அந்த வகையில் துருக்கியின் அரச சர்வதேச சமுக தொண்டா் நிறுவனமான ”ரிக்கா” எனும் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலக்ரொனிக் துறையில் உள்ள 16 இலங்கை ஊடகவியலாளா்களை கடந்த 2 மாதங்கள் தெரிபு செய்து பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

உலகில் உள்ள176 நாடுகளில் ரிக்கா நிறுவனமும் மற்றும் துருக்கி நாட்டின் வானொலி, தொலைக்காட்சி நிறுவனத்தின் பயிற்சிக் கல்லுாாிகளில் ஊடாகவே ஒவ்வொரு 4 பேரை தெரிவு செய்த 10 நாட்கள் அந்த நாட்டுக்கு வரவழைத்து அரசாங்கத்தினால் சகல  வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

இலங்கையுடன் வேறு 7 நாடுகளது ஊடகவியலாளா்களும் இப் பயிற்சிகளில் அடங்குகின்றனா்.

வானொலி, தொலைக்காட்சி, படப்பிடிப்புத்துறைகளின் லைட்டிங், தொலைக்காட்சி சவுன்ட், எடிட்டிங் போன்ற துறைகளில் பயிற்சிகளும் அவா்களது அரச நிறுவனமான ரீஆர்ரீ நிறுவனத்தில் உள்ள பல்வேறு ஸ்டூடியாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சிகளையும் அளித்தனா்.

இறுதில் வெற்றிகரமாக பயிற்சிகளை முடித்தவா்களுக்கு அங்காரவில் உள்ள ரிக்கா நிறுவனத்தின் பணிப்பாளா் நாயகம் முஸ்தபாவினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

iiiut

777 877 7787 76667 7777876

Web Design by The Design Lanka