சித்திரை புதுவருட போக்குவரத்து வழக்குகள் » Sri Lanka Muslim

சித்திரை புதுவருட போக்குவரத்து வழக்குகள்

courts

Contributors
author image

காமிலா பேகம்

 இம்மாதம் 11 ம் திகதி தொடக்கம் 16 ம் திகதி மாலை வரை, போக்குவரத்து குற்றங்கள் சம்பந்தமாக ,  சாரதிகள் மீது பொலிசாரினால் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள் 1270 பேர் உள்ளடங்கி உள்ளனர். அவ்வாறே ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளில் மட்டும் ,மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள் 237 பேர் கைதாகி உள்ளதுடன், போக்குவரத்து குற்றங்கள் சம்பந்தமான வழக்குகள் 6,651 பதியப்பட்டுள்ளன.

மேலும், ஏப்ரல் 15 தொடக்கம் 16 வரையான இரு நாட்களும் போதையுடன் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக, 329 பேர் கைதானதுடன் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக,5,519 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Web Design by The Design Lanka