சவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் வபாத் – இருவர் ஆபத்தான நிலையில்

0 0
Read Time:1 Minute, 52 Second

சவுதி அரேபியாவில் நேற்று பின்னேரம் (19) இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வபாத்தாகியுள்ளார். இவ்வாறு மரணித்த இளைஞரின் பெயர் முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

நேற்று வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக இவர்கள் மூவரும் சவுதி அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றதாக எமது இணையத்தள சவுதி செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இவ்விபத்தில் சிக்கிய மூவரூம் மருதமுனையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதுடன் ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் சவுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தள சவுதி செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

57240573_290142435245897_4434488595645988864_n ma

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %