முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் » Sri Lanka Muslim

முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள்

Contributors
author image

Editorial Team

நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பான சகல தரப்பினருக்கும் விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களின் பெரும்பாலானோர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர்கள். இவர்கள் ஐஎஸ் அமைப்புக்கு எதிரானவர்கள். உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் இரண்டு வாரத்திற்குள் அறிக்கையொன்று பெற்றுக் கொள்ளப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by The Design Lanka