கமருர் ரிழா எழுதிய ”மண்வாசனை ” நூல் வெளியீடு!! - Sri Lanka Muslim

கமருர் ரிழா எழுதிய ”மண்வாசனை ” நூல் வெளியீடு!!

Contributors
author image

M.Y.அமீர்

எம்.வை.அமீர்,எம்.ஐ.அஸ்ஹர்,யூ.கே.கலித்தீன்


சாய்ந்தமருது எம்.சீ.எம்.கமருர் ரிழா எழுதிய ”மண்வாசனை ” இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கிராமிய வட்டார வழக்குச் சொற்கள் நூல் வெளியீட்டு விழா நேற்று ( 22 ) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி இராசவாசல் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸஹிரியன் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன“றியத்தின் தலைவர் ஏ.எச்.எம்.றிஸான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூலாய்வினையும் முன்னாள் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட் சிறப்புரையினையும் கல்வியமைச்சின் கல்வி பணிப்பாளர் எம்.எப்.எம்.சர்ஜுன் விளக்க உரையினையும், கல்முனை பிராந்திய இலங்கை மின்சார சபை பிரதம பொறியியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் பிரதான உரையையும் நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும் ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா , அக்கரைப்பற்று பொது வைத்தியசாலை வைத்தியர் டாக்டர்.எம்.ரவீந்திரன் , சர்வதேச உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , டாக்டர் எம்.ஐ.எம்.ஜமீல் , ஸாஹிராக் கலலூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ரமீஸ் அபுபக்கர் உள்ளிட்ட கல்விமான்கள் , எழுத்தாளர்கள்,கவிஞர்கள் , வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0360

8

7

DSC03327

Web Design by Srilanka Muslims Web Team