சஹ்ரானின் போதனை வகுப்புகளில் பங்குபற்றியவர் கைது » Sri Lanka Muslim

சஹ்ரானின் போதனை வகுப்புகளில் பங்குபற்றியவர் கைது

arrest

Contributors
author image

Editorial Team

தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவரான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பைக் கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தில், வெலிமடையைச் சேர்ந்த ஒருவர், நேற்று (16) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை – பொரகஸ் சீல்மியாபுர, புதுர்திஸா மாவத்தையைச் சேர்ந்த 21 வயதான நபரே, கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர், சஹ்ரானின் போதனை வகுப்புகளில் பங்குபற்றினார் என்றும், மாவனெல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேநகபர்களுடன் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து கண்டறியப்ப ட்டுள்ளனவென பொலிஸார் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டசந்தேகநபரை, வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Web Design by The Design Lanka