ஜனாதிபதியிடம் கருத்துக்கேட்க தெரிவுக்குழு நடவடிக்கை » Sri Lanka Muslim

ஜனாதிபதியிடம் கருத்துக்கேட்க தெரிவுக்குழு நடவடிக்கை

sri-lanka-president-maithripala-sirisena3_0

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துகளையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

முன்னதாக, தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கிய சிலர், ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டுக் கூறியதாலும் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களைச் சந்திக்க ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்துள்ள சூழ்நிலையிலும், ஜனாதிபதியின் கருத்துகளைக் கேட்டறிய, தெரிவுக்குழு உத்தேசித்துள்ளது.

தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு ஜனாதிபதியை கேட்பது இப்போதுள்ள அரசியல் நிலையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதாலும் தெரிவுக்குழுவில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதாலும், ஜனாதிபதி இருக்கும் இடத்துக்குச் சென்று, அவரது  கருத்துகளைப்பெற யோசனை செய்யப்பட்டுள்ளதாக, தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் அடுத்தடுத்த வாரங்களில் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் நாளைய தினம் (18) தெரிவுக்குழு கூடும்போது, காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் – தற்போதைய பொறுப்பதிகாரிகள் சாட்சியமளிக்கவுள்ளனர்.

Web Design by The Design Lanka