தனக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் » Sri Lanka Muslim

தனக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

haleem

Contributors
author image

Editorial Team

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிப்பதற்காக தனக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம் தெரிவித்தார்.

கண்டி பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக ச் சந்திப்பொன்றின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அசாத் சாலி, தன்னைப் பற்றியும் தன்னுடைய பிரத்தியேக செயலாளராக இருந்த தனது சகோதரரான பாஹிம் பற்றியும் அடிப்படையற்ற விதமான கருத்துகளை தெரிவித்துள்ளதுடன், இதனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்,  இது சம்பந்தமாகப் பதிலளிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு அவர் கேட்டுகொண்டார்.

Web Design by The Design Lanka