இணக்கம் » Sri Lanka Muslim

இணக்கம்

ranil

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் இடையில், பிரிதொரு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தின் மத்தியஸ்தர்களாக, அமைச்சர்களான ராஜித்த சேனாரத்னவும் ரவி கருணாநாயக்கவும் ஈடுபட்டுள்ளார்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரதிபலனாகவே, இன்றைய தினம் (18) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், கடந்த காலங்களில் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது அவ்விருவரும், பிரிதொரு உடன்பாட்டுக்கு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது, அரசாங்கத்தை நல்லபடியாகத் தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு வழிசமைக்குமென, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாகவே, இன்றை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் காரணமாக, கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி கலந்துகொண்டு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம், சற்று காரசாரமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி, பின்னர் அந்தத் தீர்மானத்திலிருந்து பின்வாங்கியிருந்தார். அதன்படி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வும், இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூடவுள்ளது.

இது தொடர்பில், சபாநாயகர் தலைமையில், இன்றைய தினம், விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றையும் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

Web Design by The Design Lanka