கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்களை மோதவிட சூழ்ச்சி - Sri Lanka Muslim

கிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்களை மோதவிட சூழ்ச்சி

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

M.R.Stalin


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகமானது 1989 ஆம் ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டது.

இதையொட்டியகாலத்தில் நாடு முழுவதும் இதே போன்ற 25 உப செயலகங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இன்றைய நிலையில் அவையனைத்தும் அதாவது குறித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தவிர்ந்த நாடு தழுவிய ஏனைய 24 உப செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இன்றுவரை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகம் ஆனது தரமுயர்த்தப்படாமல் இருப்பது துரதிஷ்ட்டவசமானதொன்றாகும்.

சுமார் முப்பது வருடகால தரமுயர்த்தும் கோரிக்கை தமிழ்-முஸ்லீம் என்கின்ற இனவாத அரசியல் போட்டா போட்டிகளில் சிக்குண்டு சாத்தியமாககாமலேயே சென்றுகொண்டிருக்கின்றது.

மிக இலகுவாக செயற்படுத்தக்கூடிய இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகள் இன்று பெரும் சவால் நிறைந்த விடயமாக மாறுவதற்கு காரணமென்ன?

தங்கள் அரசியல் தலைமைகளின் அப்பிரதேச மக்கள் நம்பிக்கை இழந்த விட்ட நிலையில் தெற்கிலிருந்து நீதிமான்கள் வந்து இப்பிரச்சனையை கையிலெடுக்கின்றனர். தரமுயர்த்தல் கோரிக்கைக்கு எதிராக இப்பொது முஸ்லிம்களில் பகுதியினரும் உண்ணா விரதமிருக்க தொடங்கியுள்ளார்கள். கல்முனை மாநகர மேயரும் அதற்கு ஆதரவாக உள்ளார்.

இருபுறமும் கட்டி நின்று இளைஞர்கள் முறுக்கேற்றப்படும்போது நிலைமைகள் கட்டுங்கடங்காது போகும் வாய்ப்புக்கள் அதிகம். குறித்தும் பொறுப்புள்ளவர்கள் இனிமேலும் மெளனமாக இருக்க முடியாது.

தமிழ்- முஸ்லீம் தலைமைகள் விட்ட இடைவெளியில் சிங்கள இனவாதிகள் புகுந்துள்ளார்கள். தமிழர்களை பொறுத்தவரையில் இன்றைய தலைவராக
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்அத்துரலிய ரத்னதேரரே வலம்வருகின்றார். இனவாதி ஞானசார தேரர் களமிறங்குகின்றார்.

அரியேந்திரன் யோகேஸ்வரன் போன்றவர்கள் தரம்உயர்த்தலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். தமிழரசு கட்சி .இது தரமுயர்த்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற முஸ்லீம் காங்கிரசின் நிலைப்பாட்டை அனுசரித்து மெளனம்காத்து வருகின்றது. பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுகின்ற இந்த இரட்டை நிலைப்பாடு மிகவும் மோசமானது. இதனுடாக கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களை மோதவிடுகின்ற சூட்சி இருக்கக்கூடும். கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சி செய்து தேனிலவு கொண்டாடிய தமிழரசு கட்சியும் முஸ்லீம் காங்கிரசும் ஏன் குறித்து கலந்துரையாட மறுக்கின்றன?

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆயுள் பரியந்தம் ஆதரவு வழங்குகின்ற தமிழரசு கட்சியும் ரணிலுக்கு விரலில் காயம் காயம் பட்டாலும் விழுந்தடித்து ஓடுகின்ற சம்பந்தனும்,சுமந்திரனும்,முஸ்லீம் காங்கிரசும் ஒரு வாரத்தில் மந்திரிசபையில் தீர்க்கின்ற இந்த பிரச்னையை ஏன் இத்தனை சிக்கல் நிறைந்ததாய் மாற்றவேண்டும்?

ஆளும் வர்க்கங்கள் ஒட்டி உறவாடிக்கொண்டு ஏழை எளிய மக்களை ஏன் பதட்டத்துக்குள்ளும், சுமூகநிலையை சீரழிக்கின்ற இன
முறுகல்களுக்குள்ளும் ஏன் தள்ளவேண்டும்?

Web Design by Srilanka Muslims Web Team