கிழக்கு மாகாணத்தின் படித்த தமிழர்கள் கவனத்திற்கு... - Sri Lanka Muslim

கிழக்கு மாகாணத்தின் படித்த தமிழர்கள் கவனத்திற்கு…

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Sivaraja ramasamy


நேற்று கல்முனை போராட்டக் களத்திற்கு வந்த அமைச்சர்களை விரட்டி அடித்ததாக பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் செய்திகள் உலவுகின்றன…

அமைச்சர்கள் மனோ கணேசன் – தயா கமகே மற்றும் சுமந்திரன் எம்பி ஆகியோர் விரட்டப்பட்டதாக புளகாங்கிதம் வேறு சிலருக்கு..

ஒரு அரசின் பிரதிநிதிகள் சந்திக்க வரும்போது உங்கள் உள்வீட்டு அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களுடன் பேசியிருக்கலாம்..

அவர்கள் கொண்டுவந்த யோசனைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றால் அவற்றை புறந்தள்ளி உண்ணாவிரதத்தை தொடர்ந்திருக்கலாம்.

எல்லாவற்றையும் விடுத்து… மேல் பார்த்து எச்சில் உமிழ்ந்தது போல நடந்துகொண்டு யாரோ ஒரு உள்ளூர் அரசியல் பின்னணியில் செயற்பட்டு நடந்து கொண்டிருக்கிறது கல்முனை தமிழ்ச் சமூகம்…

உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் கூறியிருந்தால் அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் மனோவும் தயாவும் பேசியிருப்பார்கள்.. மறுபக்கம் தமிழரசுக் கட்சியும் இனமுறுகல் இல்லாமல் நிதானமாக இந்த விடயத்தை கையாண்டிருக்கும்…( அவர்கள் மீது தவறுகள் இருந்தாலும் அவர்களை இப்படி எதிர்க்கும் தருணமா இது ..? )

சரி.. இப்போது ஞானசார தேரர் வந்து ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எடுத்து தருவதாக சொல்லியிருக்கிறார்..

அதற்குள் அப்படி செய்யாமல் மீண்டும் தேரர் வந்தால் நேற்று நடந்து கொண்டது போல அவரிடம் நடந்து கொள்வீர்களா?

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் கல்முனை தமிழ் மைந்தர்கள் யோசியுங்கள்…!

Web Design by Srilanka Muslims Web Team