இன்று வைக்கப்பட்டுள்ள தீ - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பஷீர் சேகுதாவூத்


114 ஆண்டுகளுக்கு முன் *செர்கி நிலஸ்* ரஷ்ய மொழியில் எழுதி ஆங்கிலத்தில் “Protocols of elders of the Zion” என்று மொழி பெயர்க்கப்பட்ட “யூத இரகசிய அறிக்கை” பற்றிய நூலில் இருந்து நான் அடிக்கோடு இட்டவற்றில் சில…( இப்புத்தகம் தமிழில் அடையாளம் வெளியீடாக வந்துள்ளது)

1)
இந்த உலகில் நல்லவர்களைவிட தீயவர்களே அதிகமாக இருக்கிறார்கள். இதைக் கவனத்தில் வைத்துப் பார்த்தால் மக்களை அச்சமூட்டியும் வன்செயலைப் பயன்படுத்தியும் ஆட்சி நடாத்தினால்தான் நல்ல பலன்கள் கிடைக்கின்றதே தவிர அறிவுபூர்வமான விவாதங்களை நடத்துவதால் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

2) தாராளவாதக்(Liberalism) கொள்கையை ஆதரிக்கும் எந்த அரசும் மக்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடும். அந்த நோயால் அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனப்பட்டு அழியும்.உள்நாட்டுச் சண்டைகளால் அந்நாடு தன்னைத்தானே அழித்துக்கொள்ளலாம் அல்லது உள்நாட்டுக் குழப்பத்தால் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு உட்படலாம்.

3)
உளறுகிற முட்டாள்களின் பின்னால்தான் மக்கள் செல்கிறார்கள் என்ற நிலை இருக்கும்போது, அறிவுரை மூலமாக மக்களை வழிநடத்த முடியும் என்பதை எதை வைத்து நம்புவது?

4)
பேராசைகளாலும், மூடநம்பிக்கைகளாலும்,முன்னோர் வழிமுறைகளாலும், மனக்கிளர்ச்சிகளாலும் மட்டுமே பெரும்பாலான மனிதர்களும், மக்கள் கூட்டங்களும் வழிநடத்தப்படுகின்றனர்.

5)
தங்களுக்குத் தேவையான இரத்தத்தை ஒவ்வொருமுறை குடித்த பின்னரும் அந்த மிருகங்கள் உறங்கிவிடுகின்றன என்பது உண்மை.

6)
எல்லாக் காலத்திலும் மக்கள் வெறும் வார்த்தை அளவிலான வாக்குறுதிகளை மட்டும் நம்பிவிடுகிறார்கள். வெளிப்பாசாங்கு, ஆரவாரங்களை நம்பி ஏமாந்துபோகும் இந்த மக்கள், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்பதைக்கூட கண்காணிப்பதில்லை. அப்படி சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான இடைவெளியை நோக்குபவர்கள் மிகவும் அரிது.

7)
ஒரு இராஜதந்திரி என்று சொன்னால் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் பெருத்த வேறுபாடு அதாவது முரண்பாடு இருக்கும்.

#இன்று வைக்கப்பட்டுள்ள தீ அனுமானின் வாலில் அல்ல சீதையின் சீலையின் முந்தானையில் என்பதை அறிவோம்! ஒன்று சீலையை அவிழ்த்து எறிந்துவிட்டு அம்மணமாக நின்று தப்பிக்கவேண்டும் அல்லது எரிந்து செத்தொழியவேண்டும். சீதை இலங்கைக்கு உவமானமாகும்.#

Web Design by Srilanka Muslims Web Team