மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் உரிமைப் போராட்டம் வெற்றியளிக்குமா? - Sri Lanka Muslim

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் உரிமைப் போராட்டம் வெற்றியளிக்குமா?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

லங்காஈநியூஸ்


அத்தே ஞானசார தேரரை முறையற்ற வகையில் விடுதலை செய்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் முஸ்லிம் வைத்தியர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட வேண்டும் எனவும் நாம் என்றால் வில்லை கொடுத்து கொலை செய்வோம் என்றும் சட்டத்தில் பிரயோசனம் இல்லை என்றும் குரோதமான வகையில் கருத்துக்களை வெளியிட்ட அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினூடாக உரிமைப் போராட்ட களத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 2018 ஓகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றத்தினால் தண்டனை பெற்று சிறையில் இருந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை (SL/FR/ 256/2019 ) தாக்கல் செய்துள்ளார்.

ஞானசார தேரர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 19 வருட சிறை தண்டனையை ஆறு வருடத்தில் முடிக்கும் வகையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பொது மன்னிப்பில் அவரை விடுதலை செய்துள்ளதுடன் இந்த செயற்பாட்டினை முறையான வகையில் செய்யாது தான்தோன்றித்தனமாக செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பின் பிரகாரம் 34 ஆம் இலக்க சரத்தில் தனது அதிகாரத்தை செயல்படுத்திய ஜனாதிபதி, நீதிமன்றத்தை அவமதித்த கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமை நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தும் செயல் என மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தனது செயற்பாடுகளில் பொறுப்பு மிக்கவராக விளங்குகிறார். இதனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஞானசார தேரர் செயற்பட்ட விதத்தினால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதுடன் நீதிமன்றத்தின் அதிகாரம் நீதித்துறையின் அதிகாரம் என்பவற்றின் அபிமானம் பாதிப்படைந்துள்ளதாகவும் சட்டத்தின் பெறுமதி கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் கீழ் அனைத்து பிரஜைகளும் பாதுகாப்புடன் என்று கூறப்படும் சொற்பதங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய அஸ்கிரிய மகாநாயக்கர் வராகாகொட ஞானரத்ன தேரர் கடந்த 15ஆம் திகதி கித்சிரிகம ரஜமகா விகாரையில் வைத்து குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நபரின் சமூக அந்தஸ்து எதுவாக இருந்தாலும் குரோத கருத்துக்களை வெளியிட்டால் தண்டனை வழங்கப்பட வேண்டும். குறித்த தேரருக்கு எதிராக தராதரம் பாராது சட்டத்தை செயல்படுத்த வேண்டும். காவி உடை அணிந்தவர்கள் நாட்டின் நீதிக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். நாட்டின் நீதியை நாட்டின் சட்டத்தை மீறுபவர்களாக இருக்க முடியாது என்று முறைப்பாட்டின் பின்னர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் நாட்டில் ஏற்பட்ட சிக்கலான தருணங்களில் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. அதில் விசேடமான வழக்கு 2018 அரசியல் யாப்பு சூழ்ச்சி சம்பவத்தின்போது மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதன்போது ஜனாதிபதி அரசியல் யாப்பினை மீறியதாக உயர்நீதிமன்றத்தின் 7 நீதியரசர்கள் குழு ஏகமனதாக தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

பொரளை ஓவல் மைதானம் என்று கூறப்படும் பீ. சரவணமுத்து மைதானம் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்களின் தந்தையான பாக்கியஜோதியால் நாட்டு மக்களுக்கு பரிசாக அன்பளிப்பு செய்யப்பட்ட அவர்களது தனிப்பட்ட சொத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team