உலக ஒழுங்கின் மறு ஆக்கம் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பஷீர் சேகுதாவூத்


1
பனிப்போருக்கு பிந்திய ஆண்டுகள் மக்களின் அடையாளங்களும் அந்த அடையாளங்களின் சின்னங்களும் நாடகத்தனமான மாற்றங்களின் தொடக்கங்களைக் கண்டன. கலாச்சார அடிப்படையில் உலக அரசியல் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது.

2
பனிப்போருக்குப் பிந்திய உலகில் கொடிகள் முக்கியமாயின. அதுபோல சிலுவைகள், பிறைகள், குல்லாய் உள்ளிட்ட கலாச்சாரத்தின் பிற குறியீடுகளும் முக்கியமானவையே.ஏனெனில் கலாச்சாரம் முக்கியமானது.

3
மெய்யான பகைவர்கள் இன்றி மெய்யான நண்பர்கள் இருக்க இயலாது. நாம் எதுவாக இல்லை என்பதை நம்மால் வெறுக்க முடியாவிட்டால் நாம் எவ்விதம் இருக்கிறோம் என்பதை நேசிக்கமுடியாது. இவையெல்லாம் பழைய உண்மைகள். இவற்றை ஒரு நூற்றாண்டுக்கும் அதிக அளவு உணர்ச்சிமயமான வெற்றுப் பேச்சுக்குப் பின்னால் வலியுடன் மறுகண்டுபிடிப்புச் செய்துகொண்டிருக்கிறோம். இவற்றை மறுப்பவர்கள் தங்கள் குடும்பத்தை, பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, பிறப்புரிமையை ஏன் தங்கள் சுயத்தையே மறுப்பவர்கள் ஆகிறார்கள்! இவை இலேசில் மன்னிக்கப்படமாட்டாது. இந்தப் பழைய உண்மைகளில் உள்ள “வாய்ப்புக்கேடான உண்மையை” அரசியல்வாதிகளோ, அறிஞர்களோ புறக்கணிக்க முடியாது.

4
அடையாளத்தைத் தேடுகின்ற, இனப்பண்பை மறுபுத்தாக்கம் செய்கின்ற மக்களுக்குப் பகைவர்கள் அவசியம்.

உள்ளார்ந்த மிக அபாயகரமான பகைமைகள், உலகத்தின் முக்கிய நாகரிகங்களுக்கிடையிலான பிளவுக்கோடுகளின் ஊடாக நிகழ்கின்றன.

5
இஸ்லாம், முஸ்லிம் நாடுகளுக்கும் அவற்றின் அண்டை நாடுகளுக்கும் சமநிலை குலைக்கும் விளைவுகளை உருவாக்குகின்ற விதத்தில் மக்கள் தொகை வெடிப்புக்குள்ளாகிறது. பொதுவாக மேற்கு அல்லாத நாகரிகங்கள் தங்கள் சொந்தக் கலாச்சாரங்களின் மதிப்பை மறு உறுதிப்படுத்துகின்றன.

6
இந்தப் புதிய உலகத்தில், உள்நாட்டு அரசியல் என்பது இன அரசியலாகிறது.வல்லரசுகளின் போட்டியை நாரிகங்களின் மோதல் பதிலீடு செய்கிறது.

7
இக்காலத்தில், கலாச்சாரம் ஒரே சமயத்தில் பிளவுபடுத்தும் சக்தியாகவும், ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் உள்ளது.

8
உலகம் முழுவதும் மதங்களின் புத்துயிரூட்டல் கலாச்சார வேற்றுமைகளை வலுப்படுத்துகிறது.

9
#புன்முறுவல் இராஜதந்திரம், ஆமாம் போடும் கொள்கை# ஆகியவை முடிவுக்குவந்துவிட்டன.

10
முஸ்லிம்கள் மரபாகவே உலகத்தை தாருல்- இஸ்லாம், தாருல்- ஹர்ப் என்று, அதாவது அமைதியின் இருப்பிடம், போரின் இருப்பிடம் என்று பிரித்திருக்கிறார்கள். பனிப்போரின் இறுதியில், அமெரிக்க ஆய்வாளர்கள் உலகத்தை “அமைதிப் பிரதேசங்கள்” என்றும் ” கொந்தளிப்பு பிரதேசங்கள் என்றும் பிந்தியே பிரித்தனர்.

11
எல்லா முக்கிய அறிஞர்களும் ஒரு தனித்த இஸ்லாமிய நாகரிகத்தின் இருப்பினை ஏற்றிருக்கிறார்கள்.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் தோன்றி மிக வேகமாக வட ஆபிரிக்கா, ஐபீரிய தீபகற்பம் ஆகியவற்றில் பரவி, பிறகு கிழக்கு நோக்கி மத்திய ஆசியா, துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் இஸ்லாம் பரவியது. இதனால், அரபு, துருக்கி, பாரசீக, மலேயா உள்ளிட்டுப் பல தனித்த கலாச்சாரங்களும்- துணை நாகரிகங்களும் இஸ்லாத்துக்குள் இருக்கின்றன.

#பனிப்போருக்குப் பிந்திய உலக அரசியல் போக்கை விவரிக்கும் THE CLASH OF CIVILIZATUONS என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்மைக்காக அடையாளம் பதிப்பகத்துக்கு நன்றி!

Web Design by Srilanka Muslims Web Team