கட்டாரில் சிறந்து விளங்கும் இலங்கை முஸ்லிம் சகோதரரின் ஹோட்டல் - Sri Lanka Muslim

கட்டாரில் சிறந்து விளங்கும் இலங்கை முஸ்லிம் சகோதரரின் ஹோட்டல்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Abdul Muckzith

எமது இலங்கையை சேர்ந்த மற்றுமொரு இளைஞன், தொழில் நிமிர்த்தமாக கடல் கடந்து வந்தும் கூட பகுதி நேரமாக தனது கடின உழைப்பை மூலதனமாக்கி ஒரு சிறந்தமட்டத்தில் தனது சொந்த வியாபாரத் தளத்தை உயர்த்திக் கொண்டு செல்வது ஆச்சரியத்தை தருகின்றது. ஒரு பதிவையும் எழுத உத்வேகத்தை கொடுத்தது.

மொஹமட் இசாட், ஒலுவிலை சேர்ந்த இளைஞன், கட்டாரில் கட்டுமானத்துறையில் முழு நேர கனியஅளவையாளராக ஒரு கம்பனியில் பணி புரிந்து வருகிறார். இருந்தாலும் சொந்தமாக ஒரு பிஸினஸ்சை ஆரம்பிப்பது இவரது கனவாக இருந்திருக்கிறது. வெளிநாட்டில் பல லட்சம் ரூபாய்க்களை முதலீடு செய்து சொந்தமாக பிஸினஸ் ஆரம்பித்த அவரது தைரியத்தை முதலில் பாராட்டியே ஆகவேண்டும்.

கடந்த மூன்று மாதங்களாக ஆரம்பித்த இவரது Restaurant பிசினஸ்க்காக இவர் செய்த தியாகங்கள் வியப்பூட்டும். அவரது தியாகத்திற்கு சன்மானமாக இறைவன் அவருக்கு அவரது இந்த உணவகத்தொழிலிலில் போதுமான பறகத் செய்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

ஆம் இவரது உணவகத்தில் சமைத்து பரிமாறப்படும் இலங்கை உணவுகள், சூப்பராக இருப்பதும் இவரது குறுகிய காலத்துக்குள் அடைந்த வெற்றிக்கு முக்கிய ஒரு காரணம் என்று எனது நண்பர்களுடன் உரையாடும் போது தெரிந்து கொண்டேன்.

எமது பிராந்திய இளைஞனின் இந்த கடின உழைப்பிற்கு கட்டாரில் வசிக்கும் நீங்களும் கை கொடுக்க எண்ணினால் இவரது உணவகத்தில் ஒரு தடவை சென்று சுவைத்துப்பாருங்கள். உங்களை மீண்டும் மீண்டும் வந்து உணவு உண்ணத்தூண்டும்.

இவரது உணவகத்தில் வியாழன், வெள்ளி நாட்களில் பரிமாறப்படும் மரவெள்ளி கிழங்கு டேஸ்ட்க்கு எமது பிராந்திய இளைஞர்கள் கியூவில் நிற்பதாக நம்ம நண்பர் சொன்னார்.

Ocean Chef
Badriya Signal
Jollybee Area
Bin Mahmood
Doha, Qatar

FB_IMG_1561887099919

FB_IMG_1561887097298

FB_IMG_1561887089090

Web Design by Srilanka Muslims Web Team