கல்முனையை கூறு போடாதே! - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கல்முனையை வெட்டி பிரிக்கும் கபட நாடாகம் திரை மறைவில் நடக்கிறது. கல்முனை மக்கள் வங்கி முன்னால் கல்முனையை வெட்டி பிரிக்கும் கபட நாடாகம் திரை மறைவில் நடக்கிறது. கல்முனை மக்கள் வங்கி முன்னால் றவுண்ட போட்டால் ஏல்லை போட்டு G.A. படம் வரைந்து பேசித்தீர்க்க எத்தணிக்கிறார்.

கல்முனையின் இதயமாகிய டவுணை கூறுபோட எந்தவகையிலும் இடமளிக்க முடியாது.

அவர்கள் தமிழர்கள் பதுளையால் ஈழம் கேட்டார்கள் கொடுத்தார்களா? 28708 இராணுவத்தை பலியிட்டு நாட்டை பிரிவினையில் இருந்து பாதுகாத்தார்கள்.

90% மான முஸ்லிம்களது வர்த்தக பிரதேசமான கல்முனையை துண்டாட எத்தனை உயிரையாகுதல் பலி கொடுத்து பாதுகாக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக நான் கொமழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து என்னை அர்ப்பணித்துள்ளேன்.

இந்த நாட்டின் பாராளுமன்ற சட்டத்தை, பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கைகளை மீறி நாளுக்கு ஒரு பெயர், ஆழுக்கொரு இறப்பர் முத்திரை, ஒரே கடிதத்தில் – தமிழ் செயலகம், வடக்கு செயலகம், பிரதேச செயலாளர், உப பிரதேச செயலாளர் என்றெல்லாம் நினைத்தவாறு லூஸ்தனமாக கடிதம் எழுதி மாவட்ட செயலகத்திற்கும், அமைச்சின் செயலாளர்கக்கும் தமிழர்கள் அனுப்பும்போது அவைகளை தெரிந்தும் பொடுபோக்காக இருந்த அமைச்சின் செயலாளர்கள், மாவாட்ட செயலாளர்கள் அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனையாக கல்முனையை கூறுபோட்டு இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லிம்களுக்கு துரோகமிளைப்பதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

ஆயுதமுனையில் தமிழ் பயங்கர வாதிகளால் தான் தோன்றித்தனமாக எந்த எல்லைகழுமில்லாமல் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட செயலகத்திற்கு பொளத்த குருமாரும் பிரதமரும் பெரும்பான்மை சமுக அமைச்சர்களும் தமிழர்களுக்கு வால்பிடித்து நிற்கும் போது நமது முஸ்லிம் தலைவர்கள், பிரதிநிதிகள் நாட்டின் இறைமைக்கும், ஒருமைப் பாட்டிற்குமாக அரசுக்கு ஆதரவு வழங்கியதற்காக 6000 முஸ்லிம் உறவுகளை பலி கொடுத்து, பல பில்லின் பெறுமதியான சொத்துக்களையும் இழந்து, இன்றுவரை ஆட்சிக்கு துணைநிற்கும் முஸ்லிம் சமுகத்திற்கு அந்த சமுகத்தின் இதயமாகி SLMC யின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் இருப்பிடமான கல்முனையை கூறுபோட அனுமதிப்பது தற்கொலைக்கு சமமாகாதா?

ஏன் இன்னும் மௌனம்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளே!
இளைஞர்களே!
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்.

கல்முனையின் மாநகர சபை உறுப்பினர் பதவியை வாக்களித்தபடி அதாவுல்லா இந்த பொருத்தமான நேரத்தில் தந்திருந்தால் நான் அச்சபையில் கர்ஜித்து காரியம் செய்திருப்பேன். இந்த பொருத்தமான காலத்தில் எனக்கு தராததன்மூலம் அதாவுல்லா கல்முனை அளிவதன் மீதுள்ள அவரது மனோபாவாத்தை நிருபித்துள்ளார்.

கல்முனையின் பிரதிநிதி ஹரீஸ் அர்களே!

கல்முனையை கூறுபோடும் அனியாயத்திற் கெதிராக பாராளுமன்ற முன்றலில் அல்லது பொதுநிருவாக அமைச்சின் முன்றலில்
“கல்முனையை கூறு போடாதே! சட்டவிரோத செயலகத்திற் கெதிரான வழக்கின் தீர்ப்பு வரும் வாரை எந்த செயற்பாட்டிலும் இறங்காதே எனும் கோசத்துடன் ஒரு உண்ணாவிரோத போராட்டத்தை ஆரம்பிஆயுங்கள். நாங்கள் சாரைசிரையாக வாந்து
இணைகின்றோம்.

சட்ட விரோத செயலகத்தை 30 வருடமாக இயங்க அனுமதித்த சகல அரச அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தை கேட்பதை விட்டுவிட்டு, இலஞ்சம் அல்லது ஊழல்களை சாற்றுதல் செய்யும் ஆணைக்குழுவை கேட்பதை விட்டுவிட்டு அம்பாரை மாவாட்ட செயலாளர் அவர்கள் தாங்கள் தொடார்ச்சியாக செய்த பிழைகளிலிருந்து தப்புவதற்காக முஸ்லிம்களை பலிகொடுத்து அதிகாரிகளை தற்காத்துக்கொள்ள எடுக்கும் எந்த ஒரு திட்டத்தையும் முஸ்லிம்கள் ஆதரிக்கமுடியாது.

என்னால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கு அல்லா உதவியால் நிட்சயம் வெல்லும். அந்த வழக்கு முடிந்தால் இந்த சட்டவிரோத செயலகத்தின் செயற்பாட்டிற்கு துணைபோன சகல அதிகாரிகளும் நிட்சயம் தண்டிக்கப் படுவார்கள். இந்த குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவே அம்பாரை மாவட்ட செயலாளர் முஸ்லிம்களாகிய நம்மை பலிகொடுத்து ஏதோ ஒரு தீர்வை எட்ட முனைகிறார்.

சட்டத்திற்கு தலைவணங்குவோம். நீதிமன்ற தீர்ப்புவரை பொறுத்திருப்போம் என மாவாட்ட செயலாளருக்கு எடுத்துரைக்குமாறு முஸ்ஸ்லிம் அரசியல் தலைவர்களையும், பிரதி நிதிகளையும் வினயமாக வேண்டுகிறேன்.

மேற்படி கருத்தை யாரும் கருத்தில் கொள்ள வில்லையானால், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தீர்வை பின்தள்ளுமாறு வேண்டி சத்தியாக்கிரகம் போன்ற வெகுஜனப் போராட்டத்தில் குதிக்க முன்வருமாறு உணர்வுள்ள முஸ்லிம்களை கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணயுமாறு
அன்பாக வேண்டுகிறே.

ஹாஜி நஸீர்

Web Design by Srilanka Muslims Web Team