இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம் ஈடேறுமா? - Sri Lanka Muslim

இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம் ஈடேறுமா?

Contributors
author image

BBC


இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் கோத்தபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவருடைய உறவுக்கார பெண்மணி, “எங்களுக்கு கோத்தபய வேண்டும், கோத்தபய வேண்டும்” என்று முழக்கமிட்டார்.

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்த, பாதுகாப்புத் துறையில் போர்க்காலத்தில் தலைவராக இருந்த கோத்தபய ராஜபக்சவைதான் அந்தப் பெண்மணி அவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்கள் அவரை வெறுக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள், குறிப்பாக தீவிர எதிர்ப்பாளர்கள் அவரை ஒரு ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள்.

அவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் 2005 முதல் 2015 வரையில் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தார் கோத்தபய ராஜபக்ச. ஆனால் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், எதிர்ப்பாளர்கள் காணாமல் போனது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற புகார்கள் அவருடைய பதவிக் காலத்தில் அதிகமாக இருந்தன.

கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, தீரமிக்கவராகக் கருதப்படும் கோத்தபய ராஜபக்சவால் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியும் என்று இலங்கை மக்கள் பலரும் கருதுகின்றனர்.

இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம் ஈடேறுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாக்குதலைத் தொடர்ந்து கொழும்புவில் தனது இல்லத்தில் பிபிசிக்கு பேட்டியளித்த ராஜபக்ச, “எங்களுடைய ஆட்சிக் காலத்தில் தேசத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தோம்” என்று கூறினார். “இந்த அரசு அப்படிச் செய்யவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர்கள் கலைத்துவிட்டார்கள்” என்றார் அவர்.

தாங்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஈஸ்டர் நாள் வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதற்கு, புலனாய்வுத் துறைகளின் தோல்விதான் காரணம் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறை செயலாளராக தாம் இருந்த காலத்தில், அடிப்படைவாத கருத்துகள் பரப்புவதைக் கண்காணிக்க சிறப்பு ராணுவப் புலனாய்வு இருந்தது என்றும், குறிப்பாக இன்டர்நெட் மூலமான செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன என்றும் கோத்தபய ராஜபக்ச கூறுகிறார். இதற்கு சிறப்புப் பயிற்சிக்காக ராணுவ அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார் என்றும், ஜிகாதிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக அரபிக் பேசும் நபர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் சில பிரிவுகளை இப்போதைய அரசு கலைத்துவிட்டது என்று ராஜபக்ச குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் மைத்ரிபால சிறிசேன அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதை மறுக்கிறார். அவை மாற்றி அமைக்கப்பட்டு, தற்போதும் செயல்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம் ஈடேறுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு நகரில் ராஜபக்சவை முதன்முறையாக நான் சந்தித்தேன். அந்த சமயத்தில் முன்கோபம் கொண்டவராக அவர் கருதப்பட்டார். கடினமான கேள்விகளை, குறிப்பாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தொடர்புடையதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் புகார்கள் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்பதற்கு செய்தியாளர்கள் மிகவும் அச்சப்படுவார்கள்.

ஆனால் மிக சமீபத்தில் நாங்கள் சந்தித்தபோது, ராஜபக்ச நிறைய மாறிவிட்டதைப் போல தெரிந்தது. சுற்றிலும் புத்தகங்கள் இருந்த நிலையில் நடுவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவர், கடினமான கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் அளித்தார் – தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். கடந்த பல ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எதிராக நடந்த குற்றச் செயல்களுக்கு அவர் பதில் அளித்தே தீர வேண்டும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட அவர் உத்தேசித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team