முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல் - வ.ஐ.ச.ஜெயபாலன் - Sri Lanka Muslim

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இது முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலம். முஸ்லிம்களின் நெருக்கடிகளில் கால்பகுதி தற்காலிகமான சலசலப்புகள். இன்னொரு கால் பகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. மிகுதி முஸ்லிம் தேசிய நிலைபாட்டை அசாத்தியமாக்குவதில் ஊர்வாதத்த்தின் வெற்றிகள் எனலாம். .
.
சலசப்புகளை புறக்கணிப்பதும் சலசலப்பின் பின்னே நகர்த்தபடுகிற பாதகமான அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயல்படுவதும் முக்கியமானதாகும். ஆனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் வரலாற்று சிக்கல்
தேசிய நலன்களை பிந்தள்ளி முழு இனத்தையே தோற்கடிக்கும் வகையில் ஊர்வாதம் பலபட்டு முன்நிலைப்படுவதாகும்.

முஸ்லிம்களின் உண்மையான சிக்கல் முஸ்லிம்களால் தேசிய நலன்களுக்கு ஊர் நலன்களை கீழ்படுத்தி செயல்பட முடியவில்லை என்பதாகும். உண்மையில் இது ஒரு அவல நிலையாகும். கல்முனைக்குடி சாய்ந்த மருதுது பிரதேச சபை பிரச்சினை கையாளபடும் விதம் இதற்க்கு நல்ல உதாரணமாகும்.
.
அடிப்படை பிரச்சினைகளை தேசிய பிரச்சினைகளை ஏனைய இனங்களோடு ஒப்பிடும்போது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒரு தடை உள்ளது. மு

தேசிய பிரச்சினைகளுக்கு ஊர்மட்ட மாவட்ட மட்ட பிரச்சினைகளை கீழ்படுத்தும் அரசியல் பொறிமுறை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட வில்லை. இது ஒரு இனத்தின் ஆபத்தான கையறு நிலை சிக்கலாகும்.

ஊர்வாதம் சந்தர்ப வாதமாகும். தேசிய நலன்கள் அடிப்படையான சிந்தனை செயல்பாடு பொறிமுறையை உருவாக்காமல் முஸ்லிம்களுக்கு எதிர்காலமில்லை.

தமிழர்களின் தேசிய சர்வதேசிய அரசியலின் பலமே தமிழ் தேசிய நலன்களுக்கு முன் சகல ஊர் மட்ட பிரச்சினைகள் பிரமுகர்களும் கீழ்படுத்தப் பட்டிருப்பதுதான். முஸ்லிம்கள் இனியாவது இளைஞர்களாவது ஊர்களை தாண்டி தேசிய நிலைபாட்டை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். வேறு மார்க்கமில்லை.

Web Design by Srilanka Muslims Web Team