ஆர்.எஸ்.எஸ் குரு கோல்வல்கர்: ‘வெறுப்பின் தலைவனா’ இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?

Read Time:30 Minute, 59 Second


தனது மரணத்திற்கு ஒரு நாள் முன்னதாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நிறுவனர் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார், கோல்வல்கரிடம் ஒரு காகிதத்தை கொடுத்தார்.

‘என்னுடைய உடலை மருத்துவர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக உன்னிடம் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல் இந்த அமைப்பை நடத்தும் பொறுப்பு உன்னுடையதுதான்’ என்று அந்த காகிதத்தில் எழுதியிருந்தது.

ஹெட்கேவார் மறைந்த 13 நாட்களுக்கு பிறகு 1940 ஜுலை மூன்றாம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர் நிலைத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நாக்பூரில் நடைபெற்றபோது, ஹெட்கேவாரின் விருப்பம் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அப்போது, அங்கிருந்த தலைவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகம் எழுதியுள்ள வால்டர் எண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் தாம்லேவின் புத்தகத்தில் ‘த ப்ரதர்ஹுட் இன் சேஃப்ரன்’ என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார். “அனுபவம் மிக்க தலைவர்கள் யாரையாவது தான் மூத்த தலைவராக ஹெட்கேவார் நியமிப்பார் என ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் நினைத்தார்கள்”.

“அந்த நேரத்தில் ஹெட்கேவரின் வலது கை என்று கருதப்பட்ட அப்பாஜி ஜோஷிதான் ஹெட்கேவாரின் வாரிசாக இருப்பார் என்று அனைவரும் நம்பிய நிலையில், நிதர்சனம் மாறுபட்டிருந்தது .”

பின்னர், குரு கோல்வல்கரை வாரிசாக தேர்ந்தெடுப்பதற்கான பிற காரணங்களுடன் அவரது ஆங்கில மொழியில் பெற்றிருந்த புலமையும் கூடுதல் காரணம் என்றும் கூறப்பட்டது.”

அரசியலில் இருந்து விலகி இருக்க ஆலோசனை

1906, பிப்ரவரி 19ஆம் தேதியன்று ராம்டெக்கில் பிறந்த கோல்வல்கரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

1929 ஆம் ஆண்டில் தனது சகா பாபு ராவ் தெலாங்கிற்கு எழுதிய கடிதத்தில், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். “கோபமான தந்தைக்கு ஏற்ற மகனாக இருந்த கோல்வல்கரின் நாடி நரம்புகளில் எல்லாம் ரத்தம் வேகமாக பாய்கிறது,” என்று கூறியிருந்தார்.

நோய்வாய்ப்பட்டிருந்த போது புகை பிடிக்கத் தொடங்கியதைப் பற்றி எழுதியுள்ளார். நாக்பூர் கலவரத்தின்போது தனது கைகளை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும் அவர் தெலாங்கிடம் தெரிவித்திருந்தார்.

“எம்.எஸ். கோல்வல்கர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்தியா” என்ற புத்தகத்தை எழுதிய ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் டாக்டர் ஜோதிர்மோய் சர்மா இவ்வாறு கூறுகிறார், “நாக்பூரில் பலர் தங்கள் கைகளைப் பயன்படுத்தினார்கள். அவர்களது சித்தாந்தத்துடன் உடன்பட்டால், காந்தியவாதி அல்லாத புரட்சியாளர்கள்’ என்று கூறலாம்.”

குரு கோல்வல்கர்படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG

“நீங்கள் அவர்களுடன் உடன்படவில்லை என்றால் அவர்களை கிளர்ச்சியாளர்கள் என்று அழைப்பீர்கள். இந்த வழியில், சாவர்க்கர் தனது ஒன்பது வயதில் மசூதியின் மீது கற்களை வீசினார். என்னுடைய கருத்துப்படி இந்த விஷயங்கள் அனைத்திற்கும் எந்தவித முக்கியத்துவமும் இல்லை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் அரசியலுக்கு பெரிய அளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.”

“மகாபாரதத்தில் ஒரு வசனம் உள்ளது, அதை அவரும், அவருக்கு பின்வந்த பல தலைவர்களும் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கின்றனர். அரசியல் என்பது விலைமாதர்களின் மதம் என்று தனது பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாக திரும்பத் திரும்பப் பேசினார். ஜனசங்க உறுப்பினர்களை அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தங்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நாட்டின் அரசியலை இயக்கினார்கள் என்பது வேறு விஷயம்.”

துயரத்திலும் அமைதி

சதாசிவ கோல்வல்கரின் தாக்கம் அனைத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் மீதும் மிக அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது. சங்கத்தின் வட்டாரங்களின்படி, அவர் தற்போது சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக பாரம்பரியத்தின் மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்படுகிறார்.

இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான ராம் பஹதூர் ராய்க்கு, அவரை பலமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார் ராம் பகதூர் ராய். “ஒருமுறை நான் அவர்களுக்கு எதிராக ஒரு கடிதம் எழுதினேன். எங்களது கடிதங்களுக்கு பதிலளிப்பது குருஜியின் வழக்கம். சுற்றுப்பயணத்தில் அவர் இருந்தாலும், அவர் தலைமையகத்திற்கு திரும்பிய பிறகு அனைத்துக் கடிதங்களுக்கும் பதிலளிப்பார்.”

டாக்டர் ஆவாஷி தட்டே அவரது செயலாளராக இருந்தார், தொழில் முறை மருத்துவராக இருந்த அவர், ஜனசங்கத்தின் தலைவர் தீன்தயால் உபாத்யாயா கொலை செய்யப்பட்டபோதுதான் 1968ஆம் ஆண்டில் குருஜியை முதன்முதலில் பார்த்தார்.

“குருஜி அலகாபாத்தில் இருந்தார், அங்கிருந்து அவர் நேரடியாக முகல்சராய்க்குச் சென்றார், அங்கு தீன்தயால் உபாத்யாயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் அங்கே அழுதுக் கொண்டிருந்தபோது, அவர் மட்டும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.”

சுவாமி அமிர்தானந்த் உடன் குரு கோல்வல்கர்படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG
Image captionசுவாமி அமிர்தானந்த் உடன் குரு கோல்வல்கர்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இருந்து விலகியே இருந்த கோல்வல்கர்

1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இருந்து ஜனசங்கம் விலகியிருக்க வேண்டும் என்ற குரு கோல்வல்கரின் முடிவு, அவரது பதவிக்காலத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய முடிவாக பார்க்கப்படுகிறது. சங்கம் அந்த முடிவை விமர்சித்தது. ஆனால் இந்த முடிவின் பின்னால் அவருடைய பிரத்யேகமான தர்க்கம் இருந்தது.

“RSS-icons of Indian Rights” என்ற புத்தகத்தை எழுதிய நீலஞ்சன் முகோபாத்யாய் இவ்வாறு குறிப்பிடுகிறார், “1930-31ல் காந்தி தண்டி யாத்திரைக்கு பிறகு, ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது கூட, அதில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்பதற்கு ஹெட்கேவார் அனுமதி வழங்கவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். “

“கர சேவகர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வேண்டுமானால் அந்த இயக்கத்தில் ஈடுபடலாம் என்று அவர் கூறிவிட்டார். சத்தியாக்கிரகத்தில் பங்கேற்பதற்கு முன்பு அவரே சங்கத்தின் பதவியை விட்டு விலகியதோடு, பரஞ்பேவை சங்க பொறுப்பாளராக நியமித்தார்.”

“காலனித்துவத்தை எதிர்ப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய குறிக்கோள் அல்ல, இந்து சமுதாயத்தில் முஸ்லிம்கள் இருக்கும்படியான சமுதாயத்தை வலுப்படுத்த கோல்வல்கர் விரும்பினார். ஏனெனில் முஸ்லிம்கள் இந்து சமுதாயத்தை அவமதித்ததாக கருதிய அவர், அதற்காக பழி தீர்க்க விரும்பினார். இதனால்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தார்.”

“பிரிட்டிஷாரை நாம் ஏதாவது காரணத்திற்காக தொந்தரவு செய்தால், அவர்கள் இந்துக்களை பிரித்தாள்வார்கள், அதோடு இந்துக்களுக்கு எதிர்ப்பாகி விடுவார்கள். பிறகு முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை நிறுத்தும் தனது நோக்கம் நிறைவேறாது என்று அவர் நம்பினார்.”

காந்தி கொலைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் மீது தடை

காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டபோது, அந்த அமைப்புக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, கோல்வல்கர் சென்னை மாகாணத்தில் இருந்தார். கோல்வல்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் சி.பி.பிஷிகர் அந்த தருணத்தை இவ்வாறு விவரிக்கிறார். “அப்போது, கோல்வல்கரின் கையில் தேநீர் கோப்பை இருந்தது. காந்தி கொலை செய்யப்பட்ட விஷயத்தை கேட்டதும் சற்று நேரம் அவர் ஒன்றுமே பேசவில்லை.”

“இந்த நாட்டிற்கு எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம் என்ற வார்த்தையை கூறிய அவர், தனது எஞ்சிய சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார், பண்டிட் நேரு, சர்தார் படேல் உள்ளிட்டோருக்கு இரங்கல் செய்திகளை அனுப்பிவிட்டு நாக்பூருக்குத் திரும்பினார்.”

குரு கோல்வல்கர்படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG

ஆர்.எஸ்.எஸ்ஸில் சாவர்கரை சேர்க்க வேண்டும் என விரும்பினார் கோட்ஸே.

1948, பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று நள்ளிரவில் காந்தி கொலைக்கு திட்டமிட்டதாக கோல்வல்கர் மீது குற்றம் சாட்டிய நாக்பூர் போலீசார், அவரை கைது செய்தனர்.

போலீஸ் வாகனத்தில் ஏறச் செல்லும்போது, தனது ஆதரவாளர்களைப் பார்த்த கோல்வல்கர், சந்தேக மேகங்கள் விரைவில் கலைந்துவிடும். நான் எந்தவித கறையும் இல்லாமல் வெளிவருவேன் என்று கூறிச் சென்றார்.

இதனிடையில் அவரது சகாவான பையாஜி தானி, ஆர்.எஸ்.எஸ்ஸின் அனைத்து கிளைகளுக்கும் அனுப்பிய தந்தியில், “குருஜி கைது செய்யப்பட்டார், எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதி காக்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆறு மாதங்களுக்கு பிறகு, ஆர்.எஸ்.எஸ் மீதான தடை விலகியபோது, கோல்வல்கரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் நாதூராம் கோட்ஸே, ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்ததால், இந்த சம்பவத்தால், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டது.

ஜோதிர்மோய் சர்மா இதை தெளிவாக விளக்குகிறார், “கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறிவிட்டார். அவர், சாவர்க்கருக்கும் கோல்வல்கருக்கும் இடையில் ஒரு வகையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்றார், 1930களுக்கு பிறகு, சாவர்கரை இந்துக்களின் தலைவராக ஏற்றுக் கொள்வது கடினமான நிலைப்பாடு என்பதும் நிதர்சனமான உண்மையாக இருந்தது.”

“நாடு முழுவதும் இந்துவாக இருந்தால், ஒருவரால் எப்படி இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று கோல்வல்கர் கருதினார். இரண்டாவதாக, எந்தவித அரசியலும் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்று சாவர்க்கர் கருதினார். அதேசமயம், அரசியலில் ஈடுபட்டு தனது கைகளில் கறை படியச் செய்ய விரும்பாத சங்கத்தின் ஒரே தலைவராக கோல்வல்கர் மட்டுமே இருந்தார்.”

தடையின் போது ஆர்.எஸ்.எஸ்ஸின் தைரியமான தலைமை

சிறையில் இருந்து வெளியே வந்த கோல்வல்கர், அமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்.

“தடைசெய்யப்பட்ட காலத்தில் உண்மையில் சங்கத்தின் நிலை என்பது, வாழ்வா சாவா என்ற போராட்டமாக இருந்தது. காங்கிரஸில் பெரும்பாலானவர்களும், சோசலிசவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளும், ஆர்.எஸ்.எஸ் தான் காந்தியை கொன்றதாக நம்பினார்கள்” என்கிறார் ராம் பகதூர் ராய்.

டெல்லியில் நடந்த பசுவதை எதிர்ப்பு பேரணியின் போது குரு கோல்வல்கர்படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG
Image captionடெல்லியில் நடந்த பசுவதை எதிர்ப்பு பேரணியின் போது குரு கோல்வல்கர்

எனவே, ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்கள் மீது ஏராளமான தாக்குதல்கள் நடந்தன, குருஜி கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் வசித்த இடம், கடும் தாக்குதலுக்கு ஆளாகுமோ என்ற அச்சமும் நிலவியது. நீங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பிற தலைவர்கள் கூறினார்கள்.”

“தப்பித்து ஓடமாட்டேன் என்று அவர் சொல்லிவிட்டார். ஆனால் அங்கு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டார், விசாரணைக்கு பிறகு, காந்தி கொல்லப்பட்டதற்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு இல்லை என்பது சர்தார் படேலுக்கும் புரிந்தது. அதை அவர் நேருவுக்கு விளக்கினார். 1949 ஜூலை மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்பட்டது, இதற்கிடையில் குருஜி ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை பொறுப்பை எடுத்துக் கொண்டார். “

முஸ்லிம்களின் விரோதி

கோல்வல்கர் முஸ்லிம்களின் மீதான கடும் எதிர்ப்பினால் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகிறார். கோல்வல்கரின் முஸ்லிம் எதிர்ப்பின் பின்னணியில் இருந்த அடிப்படை காரணம் என்ன?

இந்த கேள்விக்கு ஜோதிர்மோய் ஷர்மாவின் பதில்: “அவர்கள் எங்களிடமிருந்து வேறுபட்டவர்கள், இஸ்லாம் இந்தியாவில் பிறக்கவில்லை, இந்த நிலம் எங்களுக்கு மட்டுமானது, இது சாவர்கரின் தாய் நாடு, தந்தை நாடு, புண்ணிய நாடு என்ற சித்தாந்த்த்தைக் கொண்டவர் கோல்வல்கர்.”

“முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடத்துவதிலும், மசூதியை கட்டுவதிலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் சுபாவத்தில் இந்துவாக இருக்கவேண்டும் என்று கோல்வல்கர் கூறுவார். மேலும் பெயரின் முதல் பகுதி முஸ்லிமாக இருக்கட்டும், ஆனால், அதையடுத்து வரும் குடும்பப் பெயர், இந்துவாக இருக்கவேண்டும் என்று கோல்வல்கர் கூறுவார்.”

குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவன்' அல்லது இந்து தேசியவாத்தின் மாபெரும் ரசிகர்?படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG

மத வன்முறையை உருவாக்கியதில் கோல்வல்கரின் பங்கு

சுதந்திரத்திற்கு முன்னர், கோல்வல்கர் உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் வகுப்புவாத வன்முறையை பெரிய அளவில் தூண்ட முயன்றார் என்பதற்கான சான்றுகள் உள்ளன.

இந்தியாவின் உள்துறை செயலாளரும் பின்னர் யூகோஸ்லாவியாவின் இந்தியா தூதராக இருந்த ராஜேஸ்வர் தயால், தனது சுயசரிதையான “எ லைஃப் ஆஃப் அவர் டைம்” இல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “வகுப்புவாத பதற்றங்கள் தீவிரமாக இருந்தபோது, மேற்குப் பகுதில் பணிபுரிந்த மூத்த துணை போலீஸ் ஆய்வாளர் பி.பி.எல். ஜெட்லி மிகவும் ரகசியமாக என்னுடைய இடத்திற்கு இரண்டு பெரிய எஃகு டிரங்கு பெட்டிகளை கொண்டு வந்தார்.”

“உத்தரப்பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் மத வன்முறையை பரப்புவதற்கான மறுக்க இயலாத ஆதாரமாக அதைக் கருதலாம். அதில் அந்தப் பகுதியின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்தின் வரைபடங்களும், அதில் முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகள் உள்ள இடங்களும் குறிப்பிடப்பட்டு, அங்கு சென்றடைவதற்கான துல்லியமான செயல்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.”

“இதில் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட கோல்வல்கரை உடனடியாக கைது செய்யுமாறு நான் அழுத்தம் கொடுத்தேன். ஆனால், முதல்வர் கோவிந்த் வல்லப் பந்த் இந்த விஷயத்தை அமைச்சரவை முன் வைக்க முடிவு செய்தார், இதற்கிடையில், கோல்வல்கருக்கு இந்த விஷயம் தெரியவந்து, அவர் தலைமறைவாகிவிட்டார்.”

ஜம்முவில் பிரேம்நாத் டோங்ராவுடன் குரு கோல்வல்கர்படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG
Image captionஜம்முவில் பிரேம்நாத் டோங்ராவுடன் குரு கோல்வல்கர்

கோல்வல்கர் – ஹரி சிங் சந்திப்பு

கோல்வல்கர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் விஷயத்தில் முக்கிய பங்கு வகித்தார். சர்தார் படேலின் அறிவுறுத்தலின்படி, ஸ்ரீநகர் சென்று மகாராஜா ஹரி சிங்கை சந்தித்தார்.

பிரபல பத்திரிகையாளர் சந்தீப் போம்சாய் தனது ‘Disequilibrium: When Golwalkar Rescued Hari Singh’, என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். சர்தார் படேல் மற்றும் காஷ்மீரின் பிரதமர் மெஹர்சந்த் மகாஜனின் தலையீட்டிற்குப் பிறகு, கோல்வல்கர் ஸ்ரீநகருக்குச் சென்று 1947 அக்டோபர் 18 அன்று மகாராஜா ஹரி சிங்கை சந்தித்தார்.”

“பஞ்சாப் மாநிலம் பற்றி கோல்வல்கரிடம் பேசிய பிரசாரகர் மாதவ்ராவ் முலே,”எனது மாநிலம் பாகிஸ்தானை முழுமையாக சார்ந்துள்ளது, காஷ்மீரில் இருந்து வெளியேறும் அனைத்து சாலைகளும் ராவல்பிண்டி மற்றும் சியால்கோட் வழியாக செல்கின்றன, எங்களுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் லாகூர், என்ற நிலையில் நாங்கள் இந்தியாவுடன் எப்படி உறவு கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் ஓர் இந்து மன்னர், பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டால், உங்களுடைய இந்து மக்களுக்கு பிரச்சனைகள் அதிகரித்துவிடும். உங்களுக்கு இந்தியாவுடன் ரயில், சாலை அல்லது விமான இணைப்புகள் இல்லை என்பது உண்மையான விஷயமாக இருந்தாலும் அவற்றை உருவாக்க முடியும். உங்கள் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதுதான் ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் அல்ல, உங்களுக்கும் நல்லது” என்று கோல்வல்கர் கூறினார்.

குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மொரார்ஜி தேசாயுடன் குரு கோல்வல்கர்படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG
Image captionகுடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மொரார்ஜி தேசாயுடன் குரு கோல்வல்கர்

லால் பகதூர் சாஸ்திரி

சீனாவுடனான போரின்போது, சிவில் நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்களிப்பால் நேரு மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, முழு சீருடை மற்றும் இசைக்குழுவுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் குழு ஒன்று 1963 குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது.

1965ஆம் ஆண்டு யுத்தத்தில், இந்தியாவின் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ஆலோசகர்களில் கோல்வல்கரும் ஒருவராக இருந்தார்.

கோல்வல்கரால் மிகவும் ஈர்க்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய், அவர் முன்னிலையில், ஒருபோதும் நாற்காலியில் அமர்ந்ததில்லை, தரையில் தான் அமர்வார்.

மறுபுறம், கோல்வல்கரின் பெரும்பாலான விமர்சகர்கள் அவரை ஒரு பிரிவினைவாதியாகவே பார்க்கிறார்கள். எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான ராம்சந்திர குஹா அவரை ‘வெறுப்பின் தலைவர்’ என்று அழைக்கிறார்.

குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவன்' அல்லது இந்து தேசியவாத்தின் மாபெரும் ரசிகர்?படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG

குஷ்வந்த் சிங்குடன் சந்திப்பு

பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங் தனது ஒரு கட்டுரையில் குரு கோல்வல்கருடனான ஒரு சந்திப்பைப் பற்றி குறிப்பிட்டுள்ளார், “நான் குரு கோல்வல்கரின் வீட்டிற்கு சென்றபோது, வீட்டிற்குள் பூஜை நடைபெறுவதைப் போல தோன்றியது. வாசலுக்கு வெளியில் காலணிகள் இருந்தன.”

“வீட்டின் உட்புறம் இருந்து, ஊதுபத்தி வாசமும், சமையலறையில் இருந்து பாத்திரங்களின் சத்தமும் கேட்டது. ஒரு சிறிய அறையில், சுமார் ஒரு டஜன் மக்கள் வெள்ளை குர்தாவும் வேட்டியும் அணிந்து அமர்ந்திருந்தார்கள். அதில் இருந்த ஒருவர் ஒல்லியாக இருந்தார் அவர் தான் 65 வயதான குரு கோல்வல்கர்.”

“முகத்தில் வெண்ணிற தாடி வைட்திருந்தார். தோள் வரை தொங்கிய கரும் முடி. அவர் கூந்தலில் இருந்து தோளில் விழும் சீரற்ற வெள்ளை தாடி. முதல் பார்வையில், அவர் ஹோ சீ மின்னின் இந்திய பதிப்பு என்று தோன்றியது. நான் அவர்களின் கால்களைத் தொட்டு வணங்கியதும், அவர் தனது பலவீனமான கைகளால் எனது இரு கைகளையும் பிடித்துக் கொண்டார்.””

ஒரு கோப்பை தேநீரை அருந்திய பிறகு, ஏன் முஸ்லிம்களை இவ்வளவு எதிர்க்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு, ” முஸ்லிம்கள் சில விஷயங்களை எப்போதும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் ஒரு காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். இரண்டாவதாக, வேற்று முஸ்லிம் நாடுகளை தங்கள் தாய்நாடாக அவர்கள் நினைக்கக்கூடாது, மூன்றாவதாக, அவர்கள் பிரதான இந்தியாவுடன் இணைய வேண்டும்.”

செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இல்லாத கோல்வல்கர்

கோல்வல்கர் ஒரு அறிவார்ந்த நபராக இருந்தபோதிலும், செய்தித்தாள்களை படிக்காதவர் என்ற கருத்து அவரைப் பற்றி பிரபலமாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் ஆதாரம் சாவர்க்கர் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தக் கொள்கைகளை விரிவாக்கியது கோல்வல்கர் என்றும் கூறப்படுகிறது.

நீலாஞ்ஜன் முகோபாத்யாய் இவ்வாறு கூறுகிறார், “கோல்வல்கரின் மனம் கட்டுப்பாடுகள் கொண்டதாகவே இருந்தது, அவரது வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அவருடைய சிந்தனைச் செறிவு முழுமையடைந்திருந்தது. எனவே, தான் மேலும் எதையும் படிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் நினைத்தார்.”

குரு கோல்வல்கர்படத்தின் காப்புரிமைWWW.GOLWALKARGURUJI.ORG

“எந்த சமயத்திலும் ஒரு நபர் அறிவுசார் கருத்தை முன்வைக்கும்போது, இதுதான் இறுதியான உண்மையா என்ற கேள்வி எழவேண்டும். ஆனால் கோல்வல்கரின் மனதில் இந்த கேள்வி ஒருபோதும் வந்ததில்லை, அதேசமயம் அவரது வாரிசான பாலா சாஹேப் தியோராஸ் எப்போதும் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து தேவைப்பட்டால் மாற்றியும் கொள்வார். “

ஆர்.ஸ்.எஸ்ஸின் மிகப்பெரிய பங்களிப்பாளர்

குரு கோல்வல்கரின் மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்ஸை அனைத்து சர்ச்சைகளில் இருந்தும் மீட்டுக் கொண்டுவந்து, அதனை நீடித்த நிலைத்த அமைப்பாக கொண்டு சென்றார்.

ராம் பகதூர் ராய் கூறுகிறார், “குரு கோல்வல்கர் இல்லாமல் இருந்திருந்தால் அந்த நாட்களில் ஆர்.எஸ்.எஸ் சந்தித்த மாபெரும் புயல்களை கடந்து அது நீடித்திருக்காது, உடைந்து போயிருக்கும். 1947 இல் இந்தியப் பிரிவினையின்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் குரு கோல்வல்கரின் பங்கு அதிகம் இருந்தது. அது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.”

1952இல் டெல்லி அல்லது பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் அரசு அமைக்கும் அல்லது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என்று பெரும்பாலானோர் நினைத்தார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, நாடாளுமன்றத்திற்கு இரண்டு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனசங்கத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற அவரது நம்பிக்கைக்கு மிகப்பெரிய அடி விழுந்த்து. “

“அந்த நேரத்தில் ஏராளமானோர் ஏமாற்றத்தின் காரணமாக ஜனசங்கத்தை விட்டு வெளியேறினர், அந்த நேரத்தில் குருஜி சங்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார், மேலும் 1973 வரை அமைப்பை தொடர்ந்து பராமரித்ததே குருஜியின் மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம்.”

இந்திரா காந்தி கோல்வல்கரை சந்தித்ததேயில்லை. தனது தந்தையைப் போலவே, அவரும் கோல்வல்கரை எதிர்த்தார்.

ஆனால் கோல்வல்கர் இறந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்திய இந்திரா காந்தி, “அவரது ஆளுமை மற்றும் அவரது எண்ணங்களின் ஆழம் காரணமாக, தேசிய அரசியலில் அவருக்கு ஒரு சிறப்பு இடம் கிடைத்தது, இருந்தாலும், நம்மில் பலர் அவருடன் உடன்படவில்லை” என்று தெரிவித்தார்.

Previous post எதிர்கால சந்ததியை சிறந்த முன்னோடிகளாக மாற்ற வரலாற்று அனுபவங்களுக்கமைய கட்டியெழுப்ப வேண்டும்
Next post ஆயுதமேந்தும் நிலையில் தமிழர்கள் இல்லை