
கொழும்பிலிருந்த அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்.”
Fayaz Abdul razack
“அல்ஹம்துலில்லாஹ்……….இனி லாயர்மாரின் விவேகமான காய்நகர்த்தலின் திறமையைப் பொறுத்து டாக்டர் ஷாபியின் விடுதலை தினம் நீதிமன்றில் தீர்மானிக்கப்படும்.”
“புரியவில்லை?”
“டாக்டர் ஷாபியின் விடுதலைக்கு மிகக் கடுமையாக பல சட்டத்தரணிகள் முன்னின்று வேலை செய்தார்கள். அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் டாக்டர் மீது சுமத்தப்பட்டிருக்கும் அநேகமான குற்றங்களில் அவருக்கு எதிரான சாட்சிகள் இல்லையென்று ஏற்றுக்கொண்டு விட்டது. அவருக்கும் இலங்கையில் நடந்து முடிந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென்று தீர்மானமாக தெரிந்துவிட்டது.
அதனால், பயங்கரவாத சட்டப்பிரிவில் அவரை கைது செய்து தடுத்து வைத்திருக்க சட்டம் அனுமதிக்கவில்லை என்று கருதிய நீதிமன்றம் அவரை சாதாரண குற்றவியல் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்க போலீசாரை பணித்திருக்கிறது.
இனி, அவர்மேல் சுமத்தப்பட்டிருக்கும் அதிக சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும்தான் விசாரணைக்கு தகுதியான குற்றமாக தெரிகிறது. ஒரு வாதத்துக்கு டாக்டர் ஷாபி அப்படி செய்திருந்தாலும் பொலீசாரினால் அது சம்பந்தமாக அவரைக் கைது செய்யும் அதிகாரம் இல்லை. ஆகவே, வழக்கு விசாரணையில் பிசு பிசுத்துப் போகும். ஏனைய குற்றங்களுக்கு அவருக்கு எதிராக போதிய சாட்சிகள் இல்லை.”
“கொழும்பிலிருந்த அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்.”
“குருநாகலையில் என்று நினைக்கிறேன். கொழும்பிலிருக்கும் பொழுது அவரது நெருங்கிய உறவினர்களைத்தவிர வேறெவருக்கும் அவரைக் காண அனுமதி இல்லை. அப்படி காண வருபவர்களும் அவருடன் சரளமாக, இயல்பாக உரையாட முடியாது. ஆனால், இனிமேல் டாக்டரின் அனுமதியுடன் அவரை சென்று பார்ப்பதில் தடையேதும் இல்லை. முக்கியமாக இனிமேல் அவருடன் விடயங்களை இயல்பாக கலந்துரையாட முடியும். இதுவே பெரிய நிம்மதிதானே?”
“அல்ஹம்துலில்லாஹ்…….அப்படீன்னா அவரை மோசன் போட்டு அவசரமாக வெளியில் எடுத்துவிட முடியும். இல்லையா?
“அது சாத்தியப்படாது. ஏனெனில், நீதிமன்றம் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கூக்குரலிடும் சனத்தின் உளவியலை அளவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வரும்.”
“அப்படீன்னா………?”
“டாக்டர் ஷாபியின் வழக்கு அழைக்கப்படும் தவணைகளில் எல்லாம் மக்கள் கூட்டமாக கூடி போர்க்கொடி தூக்குகிறார்களே?……அப்படியான நிலையில் அவரை வெளியில் விடுவது அவரது உயிருக்கு ஆபத்தாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது.அதனால், அவருடன் வெறுப்பாக இருக்கின்ற மக்களின் வேகம் குறையும்வரை கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டிவரும்.”
“அப்படியா?……அப்படீன்னா நமது மந்திரிமார்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை தங்களது பொறுப்பில் ஏற்றுக் கொண்டால் பேரின மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக நெறிப்படுத்தும் தலைவர்களின் இலக்கு வேறு திசைக்கு மாறும்…….இல்லையா?……அப்படி நடந்தால் டாக்டர் ஷாபியை வெளியில் கொண்டுவருவதில் சிக்கல் எழாது. சரிதானே……..”
கேட்டுக்கொண்டிருந்த எனது நண்பர் சத்தமாக சிரித்தார். “ஆம்……அப்படியான தருணங்களை நமது லாயர்மார் விவேகமாக உபயோக்கும் சாமர்த்தியத்தில் அது சாத்தியமாகும்.”
“அது சரி……….இப்பொழுது நாம் கதைத்துக் கொன்டிருந்த செய்திகளை எனது முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?”
இலங்கை பாதுகாப்புப்பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கின்ற அவர் இப்படி சொன்னார்..
“பயாஸ்….இந்த செய்தியை மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டுமென்றுதான் உங்களிடம் கூறினேன். இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நாம் ஒன்றுமே பேசவில்லையே. எல்லோருக்கும் தெரிந்த உண்மையைத்தானே பேசினோம் இதனை நீங்கள் பகிரங்கமாக எழுதுவதில் எனக்கு ஆட்சேபனை எதுவுமில்லை..”