
சாயம் வெழுத்ததும் காலம் பதில் சொல்லும்
கணக்காளர் நியமனம்.
+++++++++++++++++++
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நிதிப் பிரமாணம் 71ன் படி கணக்காளர் நியமிப்பதாக பேட்டியளித்தார். நி.பி.71 (2) ன் படி உபபிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்க முடியாது.
1992ம் ஆண்டின் 58ம் இலக்க பிரதேச செயலக உருவாக்கம் பற்றிய பாராளுமன்ற சட்டத்தின் 9ம் பந்தியில் உப பிரதேச செயலாளருக்கு பிரதேச செயலாளரே கடமைபட்டியல் வழங்க வேண்டும். ஆனால் கல்முனை பிரதேச சேயலாளர் உப பிரதேச செயலாளருக்கு அப்படி ஒரு கடமை பட்டியல் வழங்கப்படவில்லை என 28.12.2018ம் திகதி கல்முனை உப பிரதேச செயலாளர் எழுத்துமூலம் எனக்கு அறிவித்துள்ளார்.
அத்தோடு உப பிரதேச செயலாளர் T.K.அதிசயராஜ் அவர்களும் கல்முனை பிரதேச செயலளர் எம்.எம்.நஸீர் அவர்கள் முன் அவரது கடமையை பொறுப்பேற்றார். அரசியல் காரணங்களுக்காக புதிதாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் கணக்காளர் கல்முனை பிரதேச செயலாளர் அவர்கள் முன்தான் பதவி ஏற்க வேண்டும். அப்படி என்றால் ஒரு பிரதேச செயலகத்திற்கு இரண்டு கணக்காளரா? சட்டம் அதற்கு ஒருபோதும் இடமளியாது.
இது விடயமாக நான் பிரதமர் காரியாலயம், பொது நிர்வாக அமைச்சு, திறைசேரி ஆகியவைகளின் தகவல் அலுவலரை கேட்டு எழுதியுள்ளேன்.
இன்ஸா அல்லாஹ் பதில்கண்ணடு தொடர்வேன்.
எது இருட்டில், பின்கதவால் நடந்தாலும் சட்டம் அதன் வேலையை செய்யும்.
கவலைக்குரிய விடயம் என்ன வென்றால். சட்டம் இவ்வளவு தெளிவாக இருக்கும்போது நமது பா.உ.கள் ஏன் மௌனித்தார்கள். அல்லது றணிலை பாதுகாக்க, தமிழர்களை ஏமாற்றும் TNA யை பாதுகாக்க சகலரும் சேர்ந்து ஆடிய நாடாகமா? சாயம் வெழுத்ததும் காலம் பதில் சொல்லும்.
ஹாஜி நஸீர்