
ஹரீஸிற்கு கிட்டியிருக்கும் பெருந்தலைவராகும் வாய்ப்பு; தருணத்தை பயன்படுத்துவாரா?
Haaris Ali uthuma
ஒருதனி மனிதன் தத்துவமாக மாறி ஒரு இனத்திற்கு அடையாளமாக மாறியிருக்கிறான். இலங்கையில்எ இனத்திலும் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தேசிய அடையாளமாக சில அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.மறைந்தும் வாழ்கிறார்கள்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சுதந்திரத்திற்கு முன்னர் அறிஞர் சித்திலெப்பை ஓர் அடையாளமாக திகழ்கிறார்கள்.அவர் உருவாக்கிய ஸாஹிறா கல்லூரி முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் நூற்றாண்டைக் கடந்தும் இப்போதும் பேசு பொருளாக காணப்படுகிறது.மற்றைய அவருடைய அடையாளம் முஸ்லிம் நேசன் பத்திரிகை.முதன் முதலில் முஸ்லிம்களுக்கான வெகுஜன ஊடகத்தை தொடங்கி நடாத்திக் காட்டியவர்.
சுதந்திரத்திற்குப் பின்னர் இன்று வரை இலங்கையில் இருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களில் இருவருக்கு மாத்திரமே தேசிய இனத்துவ சமூக அடையாளம் காணப்படுகிறது.ஒருவர் அல்ஹாஜ் டாக்டர் பதியுதீன் மஹ்மூத்.மற்றவர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களாகும்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வியை ஸாஹிறா ஊடாக அறிஞர் சித்திலெப்பை ஆரம்பித்து வைக்க இலங்கை முழுவதும் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இன்றைய கல்வி மான்களின் உருவாக்கத்திற்கு வித்திட்டு நூற்றாண்டைக் கடந்தும் பேசப்படக்கூடிய அடையாளத்தைக் கொண்டிருக்கிறார் பதியுதீன் மஹ்மூத்
முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் கட்சியை (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)உருவாக்கி பதிவு செய்து தனித்துவ இன அடையாளத்தை நிறுவியவர்.அத்துடன் ஒரு இனத்திற்கென்று தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை நிறுவி சமுகத்தை அடையாளப்படுத்தினார் அஸ்ரப் அவர்கள்
இவர்கள் இருவரையும் தவிர மற்றைய எல்லா அரசியல் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்த வித நூற்றாண்டைக் கடந்தும் பேசக் கூடிய அடையாளங்களும் இல்லை.இவர்கள் எல்லோரும் பிறந்து வாழ்ந்து மறைந்தவர்களே!இவர்கள் பற்றி பேசுவதற்கு எந்த நேர்மறை அடையாளங்களுமில்லை.சில எதிர் மறை அடையாளங்கள் இருக்கின்றன. அதற்காக எதிர்காலம் இவர்களை சபித்துக் கொண்டேயிருக்கும்.
எதிர்காலத்தில் கிழக்கை பிறப்பிடமாக கொண்ட ஒருவருக்கு நூற்றாண்டைக் கடந்தும் பேசக் கூடிய அடையாளம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.அது
யாதெனில் தென் கிழக்கு கரையோர மாவட்டத்தை உருவாக்கி கொடுக்கும் ஒருவருக்கும் முஸ்லிம்களை பெறும்பான்மையாகக் கொண்ட தென் கிழக்கு மாகாணம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கும் தலைவருக்கும் அந்த தேசிய அடையாளம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதற்குகிழக்கு முஸ்லிம் சமூகத்தை தலைமை தாங்கி வழி நடாத்த வேண்டும். அதற்கான போராட்ட குணம் கொண்ட ஒருவர் கல்முனை ஹாரிஸ் எம்.பி இருக்கிறார்.அவர் ஹக்கீமை தூக்கியெறிந்து செயற்பாட்டு தளத்திற்கு வந்து போராடுவாரானால் அந்த தேசிய அடையாளம் அவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இல்லாதுபோனால் பத்தோடு பதினொன்றாக பிரதி அமைச்சராக இருந்த திருப்பியோடு மரணிக்க வேண்டியதுதான்.ஒரு முழு அமைச்சராகவும் மாற முடியாது.