
அன்று கதிர்காமம்; நேற்று ஜெய்லானி; இன்று கன்னியா; நாளை ?
Fahmy zearth
தமிழருக்கு தீர்வின்றேல் முஸ்லீம்களுக்கு தீர்வில்லை…
முஸ்லீம்களுக்கு தீர்வில்லாது
தமிழருக்கான தீர்வு முழுமையடையாது.
தமிழரும் முஸ்லீம்களும் இரட்டை குழந்தைகள்.
அல்லது ஒன்றில் இருந்து பிரிந்து போன இனங்கள்.
கல்முனை பிரதேச செயலக விடயத்தில் பௌத்த தேரர்களுக்கு, தமிழ் மக்கள் மீது இருந்த அபரிமிதமான காதல் கன்னியா விடயத்தில் கானாமல் போய் கிடக்கிறது.
கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவு தொடங்குவதில் முஸ்லீம்களின் அபிப்பிராயம் என்பது எல்லைகளை வரையறை செய்வதே அன்றி தமிழருக்கு வழங்கப்பட கூடாது என்பதல்ல.
அதே நேரம் மட்டக்களப்பில் கோரளை பற்று மத்தி அதாவது வாழைச்சேனை (முஸ்லீம்)பிரதே செயலகத்திற்கான எல்லை வரையறை முடிந்த பாடில்லை.
இந்த முரண்பாடுகள் ஏதோ ஓர் புள்ளியில் இருப்பவர்களுக்கு தேவையான ஒன்றே..அதுவே அவர்களின் பிரித்தாளும் பொறி முறைக்கு உதாரணமும் கூட.
சில தமிழ் முஸ்லீம் உள்ளூர் அரசியலுக்கு வாக்கு வாங்கிக்கான தேவையும் இதில் நிவர்த்திக்கவும் படுகிறது.
முஸ்லீம்களையும் தமிழர்களையும் பிரித்தாளும் புள்ளியை சிங்கள தேசம் இதமாக கையாளுகிறது.
இந்த விடயத்தை புரிந்து கொள்ளும் நிலையில் பல இன உணர்வாளர்கள் தவறவிட்டே கடந்து போகிறோம்.
கடந்த கால இனத்துவ வரலாற்றில் பல சமூகங்களும் பலத்த பிழையை விட்டே வந்திருக்கிறோம். அவற்றை சீர் செய்து எதிர்காலத்தை திட்டமிட வேண்டிய அவசியம் தமிழ் முஸ்லீம் தலைமைகளுக்கு உண்டு.
கடந்த காலத்தில் பேரினவாத நிகழ்ச்சி நிரலில் முஸ்லீம்களை அருகில் வைத்து தமிழர்களை வறுத்து எடுத்தாகி விட்டது.
தற்போது முஸ்லீம்களை இலக்கு வைக்கும் போது,தமிழர்களை அருகில் வைக்கின்ற அதே நேரம் தமிழர்களின் வரலாற்று மற்றும் வாழ்வியல் தடையங்கள் அழிக்க படுகிறது,அல்லது வரலாற்றை மாற்றி அமைக்க வாய்ப்பு பாற்கிறது பெருந் தேசிய வாதம்.
காலங்காலமாக தமிழ் சைவர்களின் வழிபாட்டு தலமாகவும் தமிழ் கடவுளாக கருதப்படும் முருகன் இருந்த கதிர்காமம் இன்று கதரகம என்று பௌத்த மேலாதிக்க இடமாக மாறி பழங்கதை ஆகிவிட்டது.
கன்னியா வெந்நீர் ஊற்று தமிழர்களின் பாரம்பரிய சின்னம் பறிக்கப்படும் சூழலில்,
முல்லைதீவு #நீராவியடி பிள்ளையார் ஆலயம் தமிழரிடம் இருந்து பறிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ள படுகிறது.
முஸ்லீம்களின் ஒரு பிரிவினர் பாரம்பரியமாக புனித தலமாக கருதி யாத்திரை மேற் கொண்ட ஜெய்லானி/தப்தர் ஜீலானி, கூராகல எனும் பௌத்தர்களின் இடமாக கூறியது மட்டும் அல்லாமல் தொல்லியல் எனும் பெயரில் அடையாளப் படுத்தப்பட்டு முஸ்லீம்களுக்கு அன்னியமாக்க படுகிறது.
இது போல் தம்புள்ள பள்ளிவாயல் என பட்டியல் நீள்கிறது.
பிரிந்து பிரிந்து தமிழரும் முஸ்லீமும் கண்ட பலன் ஒன்றும் இல்லை.எமது இணைவுக்கான பாரிய சாவால்கள் உண்டுதான் ஆனாலும் இணைந்து போவதன் பலன் எமது பலமாகும்.
அது இல்லாமல் யாவருக்கும் பலனும் இல்லை பலமும் இல்லை.