ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம் » Sri Lanka Muslim

ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம்

IMG_20190718_065059

Contributors
author image

BBC

முஸ்லிம்கள் மனம் புண்படும்படி ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநில கல்லூரி மாணவி ரிச்சா பட்டேல், குரானை விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

இந்நிலையில், இந்த நிபந்தனை தன்னை சங்கடப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் மாணவி ரிச்சா பட்டேல்.

ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்.

“ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும்? என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல்.

ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் அவர் ” எந்த பதிவிற்காக என்னை கைது செய்தனரோ அது நரேந்திர மோதி ஃபேன்ஸ் க்ளப் என்னும் ஒரு குழுவிலிருந்து எடுத்து என்னுடைய பக்கத்தில் நான் பதிவிட்டேன். அதில் இஸ்லாம் மதத்திற்கு எதிராக எதுவும் இல்லை. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார்.

யார் இந்த ரிச்சா படேல்?

ரிச்சா பட்டேல் பட்டபடிப்பு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி. அவர் ராஞ்சிக்கு வெளியில் இருக்கும் பிடோரியா என்னும் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசிக்கிறார். அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பான அஞ்சுமன் இஸ்லாமியாவின் தலைவர் மன்சூர் கலிஃபா பிடோரியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர், ரிச்சா பட்டேலின் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் பதிவு இஸ்லாம் மதத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களின் மனதை புண்படுத்துபடியாக உள்ளது. அது சமுதாய ஒற்றுமையை குலைக்கக்கூடும் என புகார் அளித்திருந்தார்.

இதன்பிறகு ஜூலை 12 அன்று மாலை காவல்துறையினர் ரிச்சா பட்டேலை கைது செய்தனர்.

இந்து சங்கம் உறுப்பினர்கள்படத்தின் காப்புரிமைரவி பிரகாஷ்

இந்த செய்தி கிடைத்தவுடன் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் பிடோரியா காவல்நிலையத்தை சூழ்ந்து ரிச்சாவை விடுதலை செய்யக்கோரினர். அதற்கு அடுத்த நாள் ராஞ்சியில் அல்பெர்ட் ஏக்கா என்னும் இடத்தில் அனுமன் மந்திரங்களை ஓதி போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதிய பதாகைகளை அவர்கள் வைத்திருந்தனர். காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். ரிச்சாவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஜாமீனில் குரான் விநியோகிக்கும் நிபந்தனை

அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார்.

அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்து சங்கம் உறுப்பினர்கள்படத்தின் காப்புரிமைரவி பிரகாஷ்

ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்.

மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள். அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்.

Web Design by The Design Lanka