அடுத்த நிமிடம் என்ன சொல்லப் போகிறார்? » Sri Lanka Muslim

அடுத்த நிமிடம் என்ன சொல்லப் போகிறார்?

IMG_20190719_091807

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ashroff sihabdeen


பெரியண்ணன் டொனால்ட் ட்ரம்பின் கூத்துக்கள் அண்மையில் சர்வதேச அரங்கில் களைகட்டிக் கொண்டிருக்கின்றன.

அவரும் வடகொரியத் தலைவரும் இரண்டு கொரியாக்களுக்குமிடையில் சந்தித்துக் கொண்ட படத்தைப் பிரேம் செய்து வெள்ளை மாளிகைக்குள் சுவரில் தொங்க விட்டுள்ளாராம்.

ஈரான் விவகாரத்தில் சும்மா படுத்துக் கிடக்கும் நாயை உசுப்பி விடுவதுபோல் நடந்து கொள்கிறார்.

இதற்கிடையில் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர் என அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தெரிவித்திருக்கிறது. 240 பேர் தகுதியற்றவர் எனவும் 187 பேர் தகுதியானவர் என்று வாக்களித்திருக்கிறார்களாம்.

அடுத்த நிமிடம் என்ன சொல்லப் போகிறார் என்ற பதட்டத்தில்தான் சர்வதேச அரசியல் களம் இருக்கிறது.

அவரை விமர்சிக்கும் காங்கிரஸ் எதிரணி குடியேற்றவாசிகளான அங்கத்தவர்களைக் குறிவைத்து “அவர்கள் அவர்களது சொந்த தேசத்துக்குப் போகட்டும்“ என்று அண்மையில் இழுத்து விட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பிட்ட எதிரணி அங்கத்தவர்கள் இவரை மிகக் கடுமையாக விமர்சிப்பவர்கள். இவர் ஒரு இனவாதி என்றே சொல்பவர்கள்.

ட்ரம்பைக் குறிவைத்துக் கடுமையாகத் தாக்கும் சோமாலிய வம்சாவழி காங்கிரஸ் உறுப்பினரான இல்ஹான் ஒமர் என்ற பெண்மணி இவரது கருத்துக்கு பிரபல அமெரிக்கப் பெண் கவிஞர் மாயா அஞ்சலோவின் கவிதை வரிகளை ட்வீற் செய்திருக்கிறார்.

“உனது வார்த்தைகளால் நீ என்னைச் சுடலாம்
உனது கண்களால் என்னைப் பிளக்கலாம்
உனது வெறுப்புணர்வால் என்னை நீ கொல்லலாம்
ஆனால்
இன்னும் எழவே விரும்புகிறேன்
காற்றைப் போல!”

Web Design by The Design Lanka