இஸ்ரேல் நிர்வாகத்தால் இடிக்கப்படும் பாலத்தீன மக்கள் வீடுகள் » Sri Lanka Muslim

இஸ்ரேல் நிர்வாகத்தால் இடிக்கப்படும் பாலத்தீன மக்கள் வீடுகள்

IMG_20190723_072554

Contributors
author image

BBC

பாலத்தீனியர்கள் வீடுகளை இடித்து தகர்த்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு கரை பகுதியை பிரிக்கும் எல்லையில் உள்ள தடுப்பு அரண்களுக்கு அருகே இந்த வீடுகள் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதால் இடிக்கிறோம் என்று கூறுகிறது இஸ்ரேல்.

700 இஸ்ரேலிய போலீஸ் மற்றும் 200 ராணுவத்தினர் இந்தப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

பாலத்தீனிய நிர்வாகம் அளித்த அனுமதியை அடுத்தே தாங்கள் வீடுகள் கட்டியதாக கூறுகிறார்கள் அந்த மக்கள். இஸ்ரேல் வடக்குகரை நிலத்தை முழுவதும் ஆக்கிரமிக்கப்பார்ப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள் அம்மக்கள். ஆனால், பாலத்தீனிய மக்கள் சட்டத்தை மீறி கட்டடங்களை கட்டி உள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது.

1967ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரை அடுத்து இஸ்ரேல் வடக்கு கரையை கைப்பற்றியது. பின் கிழக்கு ஜெருசலேம் பகுதியை கைப்பற்றியது. சர்வதேச சட்டம், இரண்டு பகுதிகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் இதனை மறுக்கிறது.

Web Design by The Design Lanka