ஹசிம் ஆம்லா: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு - Sri Lanka Muslim

ஹசிம் ஆம்லா: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Contributors
author image

Editorial Team

BBC

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் ஆம்லா சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 36.

தென்னாப்பிரிக்க வீரர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28 சதங்களுடன் 9,282 ரன்களை குவித்துள்ளார்.

முச்சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரரும் இவர்தான். 2012ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்துடனான போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 311 ரன்களை அம்லா நடித்திருந்தார்.

தென்னாப்பிரிக்காவின் முதல் வெள்ளையர் அல்லாத அணித் தலைவராக விளங்கிய ஹசிம் ஆம்லா, 2014 முதல் 2016 டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கினார்.

எல்லாவிதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்ந்து பார்க்கும்போது, ஹசிம் ஆம்லா 349 போட்டிகளில் பங்கேற்று 55 சதங்களுடன் 18,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த 27 சதங்களே தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் அடித்த அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team