சோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு » Sri Lanka Muslim

சோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு

IMG_20190811_072556

Contributors
author image

BBC

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்கப்பட்ட பின்னர், இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த பின்னர், அக்கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோர், சோனியா காந்தி தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தியின் ராஜிநாமா ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட் தீர்மானத்தின் விபரம்

மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆராய்ந்தது.

அதன்படி, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ராகுல் காந்தியிடம் கோரப்பட்டது. எனினும், தனது ராஜிநாமாவை திரும்ப பெற ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.

அதை தொடர்ந்து, காங்கிரஸ் காரிய கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை சோனியா காந்தியிடம் இடைக்கால தலைவராக தொடர வேண்டுமென்று கோரிக்கை வைக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த கூட்டத்திற்கு இடையில் வந்து ராகுல் காந்தி கலந்து கொண்டார், சோனியா இடைக்கால தலைவராக தேர்வு செய்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் காஷ்மீர் பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்த கூட்டம் நடைபெற்ற வேளையில், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் வன்முறை நிகழ்வதாகவும், சிலர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்தன. அதன் பின்னர் தான் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

Web Design by The Design Lanka