எந்தவொரு அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் » Sri Lanka Muslim

எந்தவொரு அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார்

IMG_20190815_093548

Contributors
author image

Editorial Team

எந்தவொரு அவசர அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என்று உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

சீரற்ற காரநிலையையடுத்து சகல மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனர்த்தத்திற்கும் உள்ளாகும் மக்களை மீட்பதற்கும் நிவாரணங்களை வழங்குவதற்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மண் சரிவு அபாயம் ஏற்படும் இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்..

எனினும் மண் சரிவு அபாயம் ஏற்படும் இடங்களில் மக்கள் தங்கியிருப்பார்களாயின் அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பெற்றுக் கொள்ளும் என்றும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka