சிங்கள வாக்குகளை மட்டும் நம்பியவர் தோற்பாரா? - Sri Lanka Muslim

சிங்கள வாக்குகளை மட்டும் நம்பியவர் தோற்பாரா?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

A.L.Thavam

???????? இலங்கையின் தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16,000,000 (ஒரு கோடியே அறுபது இலட்சம்) .

???????? இதில் சிறுபான்மை 25%. அதாவது 4,000,000 (நாற்பது இலட்சம்) வாக்குகள் சிறுபான்மைக்குரியது.

???????? சிறுபான்மை வாக்குகளை தவிர்த்து பெரும்பான்மை (சிங்கள) வாக்குகள் 12,000,000 (ஒரு கோடியே இருபது இலட்சம்).

???????? இலங்கை ஜனாதிபதியாக வருபவர் அளிக்கப்படும் வாக்குகளில் 50%+ யை பெற வேண்டும்.

???????? தனி சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி களமிறங்கினால் – அவர் வெற்றி பெற – சிங்கள வாக்குகளில் சுமார் 66% யினை பெற வேண்டும்.

✍???? 2010 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் வாக்களிக்காமல் யுத்த வெற்றியின் பின்னரான உச்ச கட்டத்திலும் மகிந்தவால் பெறக்கூடியதாக இருந்தது வெறும் 57.88% மாத்திரமே.

✍???? மஹிந்தவிற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டில் சிறுபான்மை மக்கள் பெருமெடுப்பில் வாக்களித்தும் சிங்கள வாக்குகளையும் சேர்த்து சந்திரிக்காவால் பெற்றுக்கொள்ள முடிந்தது 62.28% மாத்திரமே.

✍???? இந்த இரண்டு உதாரணங்களும் இலங்கை அரசியலில் மிக முக்கியமானவையாகும்.

???????? அன்று மகிந்தவின் உச்சக்கட்டத்தில் (2010) பெற்ற வாக்குகளை விட அதிக வீத வாக்குகளை பெறுமளவு ஒரு அதிசயமும் இன்று இலங்கையில் நடக்கவில்லை.

???????? அதேநேரம்,பெருமெடுப்பிலான சிறுபான்மை மற்றும் சிங்களவர்களின் அமோக ஆதரவை பெற்ற சந்திரிக்காவாலேயே 66% எட்ட முடியவில்லை.

அந்த வகையில் இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் கோட்டாவிற்கு சிறுபான்மை வாக்குகள் பாரியளவில் இல்லை. அவர் கொள்கையளவில் அதற்கான இணக்கங்களை ஏற்படுத்த தவறியுள்ளார். சிங்கள வாக்குகளை மட்டும் இலக்கு வைக்கிறார். இவரால் சிங்கள வாக்குகளில் 66% யை பெற முடியாது. JVP தனித்து போட்டியிடுவது UNP யை விட சிங்கள வாக்குகளில் மாத்திரம் குறிவைத்திருக்கும் கோட்டாவிற்கே தலையிடி.

ஐக்கிய தேசிய கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அறிவிக்கப்படும் வேட்பாளர் சிங்கள வாக்குகளில் மட்டும் குறிவைத்தால் அவரும் சிங்கள வாக்குகளில் 66% பெற முடியாமல் தோற்பார். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மையினரின் ஆதரவு பற்றி அதிகம் பேசுவதை அவதானிக்கலாம். பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இது அனுபவ கணக்கு. புரியக்கூடியவர்களுக்கு மட்டுமானது.

Web Design by Srilanka Muslims Web Team