பயங்கரவாத சந்தேக நபர்கள் மூவரை விடுவிப்பதற்கு பணம் பெற்ற நபர் கைது » Sri Lanka Muslim

பயங்கரவாத சந்தேக நபர்கள் மூவரை விடுவிப்பதற்கு பணம் பெற்ற நபர் கைது

IMG_20190920_144451

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்துவரும் சந்தேக நபர் ஒருவரையும், பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் இருந்து வரும் 2 சந்தேகநபர்களையும் விடுவிப்பதாக தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதைக் கொண்ட கொரட்டுவ வீதி கொட்டிக்காவத்தை என்ற முகவரியை சேர்ந்த வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள மொஹமட் யூசுப் மொஹமட் ஸ்மீத் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அதிகாரிகளுக்கு பணத்தை வழங்கி சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க முடியும் என்று சந்தேக நபர்களின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரின் உறவினர்கள் 17 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவை இந்த சந்தேக நபரிற்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்று கிடைத்ததை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினால், பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் மேலே குறிப்பிடப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka