கோத்தாபய தாண்டுவதற்கான தடைகள் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Abdul Waji

_—–_—————

கோட்டாபய தாண்டுவதற்கான தடைகள் இன்னும் நிறைய உள்ளன. வெள்ளிக்கிழமை வெளியான தீர்ப்பு கோத்தா இலங்கையில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்ட முறைமை தொடர்பாக உறுதி செய்திருக்கின்றதேயன்றி, அவர் இலங்கை அரசியல் சாசனத்தின் பிரகாரம் அமெரிக்க குடியுரிமையை துறந்து இலங்கை குடியுரிமையை மாத்திரம் தக்க வைத்துள்ளாரா என்பதை உறுதி செய்யவில்லை .

எதிர்வரும் திங்கட்கிழமை, கோதாவின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்திய வாதிகள் உச்ச நீதிமன்றத்தினை நாடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. உச்ச நீதிமன்றின் தீர்ப்பு பாதகமாக அமையும் பட்சத்தில் அவர் வேட்பாளர் அந்தஸ்தை இழக்க நேரிடும்.

தவிரவும் கோத்தாபயவுக்கு எதிராக நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக அவரது தந்தை டீ.ஏ. ராஜபக்சவுக்கு முறைகேடான முறையில் அரச நிதியைப் பயன்படுத்தி சிலை எழுப்பியமை தொடர்பான குற்றச்சாட்டு கோதாவுக்கு எதிராக மிக வலுவாக உள்ளது. அவற்றைக் காரணம் காட்டி மாற்றுக் கட்சிகள் வேட்பாளர் நியமனத்தின் போது கோத்தாவுக்கு எதிராக பலமான ஆட்சேபனைகளை முன்வைக்கும். அவ்வாறான நிலைமை வரும்போது, தேர்தல் ஆணையாளர் குறித்த ஆட்சேபனை தொடர்பான வழக்கு விபரங்களை பிரதம நீதியரசருக்கு வழங்கி, ஜனாதிபதி தேர்தல் தினத்துக்கு முன்பாக தீர்ப்பினைப் பெற்றுத் தருமாறு கோருவார். அவ்வாறாயின், ஆட்சேபனைக்குட்படுத்தப்பட்ட காரணிகளுக்குரிய அனைத்து வழக்குகளும் துரித விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேர்தலுக்கு முன்பாக தீர்ப்புகள் வழங்கப்படும் போது நிச்சயம் ஏதாவதொரு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தனது தந்தைக்கு சிலை வைப்புக்கு அரச நிதியைப் பயன்படுத்தியமை தொடர்பில் குற்றம் காணப்படுவதற்கான காரணிகள் வலுவாக உள்ளன.

மேற் சொன்னவாறு ஏதாவதொரு வழக்கில் கோத்தா குற்றம் காணப்படுமிடத்து, அவரது வேட்பாளர் அந்தஸ்து செல்லுபடியற்றதாக மாறுமா என்ற கேள்வி உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team