மதீனாவிற்கு உம்ரா யாத்திரை – கோர விபத்தில் 35 பேர் தீயில் கருகி வபாத்

Read Time:1 Minute, 27 Second

சௌதி அரேபியாவின் மதீனா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித உம்ரா யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்துள்ளதாக செளதியின் அதிகாரபூர்வ ஊடகமான செளதி பிரஸ் ஏஜன்ஸி உறுதிபடுத்தியுள்ளது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேர் அல்-ஹம்னா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதீனாவில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்-அக்ஹால் கிராமத்தின் அருகிலுள்ள கிஜ்ரா வீதியில் நேற்று (16) இரவு 7 மணியளவில் கனரக வாகனம் ஒன்றோடு பேருந்து மோதியதை தொடர்ந்து இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

அரேபியர்கள் மற்றும் ஆசிய நாட்டவர்கள் இந்தப் பேருந்தில் பயணம் செய்ததாக செளதி பிரஸ் ஏஜன்ஸியின் அறிக்கை கூறுகிறது.

சௌதி செம்பிறை சங்கமும், பிற அவசர சேவைகளும் சம்பவ இடத்தை சென்றடைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

விபத்து தொடர்பான விசாரணையும் தொடங்கியுள்ளது.

(பிபிசி தமிழ்)

Previous post வாக்களிப்பு வீதம் 85 சதவீதமாக அதிகரிக்ககூடும்
Next post மிருகக்காட்சி சாலை சுற்றிவளைப்பு