யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைப்பு » Sri Lanka Muslim

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைப்பு

IMG_20191017_182820

Contributors
author image

Editorial Team

தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து முதலாவது விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று 17 ஆம் திகதி காலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் சிலருடன் வந்த இந்த முதலாவது விமானத்தை சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் வருவதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்து வைத்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதிஅமைச்சர் அசோக் அபேசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Web Design by The Design Lanka